Thursday, 14 January 2016

நவீன அரசியலும் நயவஞ்சக நரிகளும்.....



இஸ்லாமிய வரலாற்றில் “அப்துல்லா இப்னு உபை, அப்துல்லா இப்னு ஸffபா” எனும் இரு பெரும் நயவஞ்சகர்களினாலையே முஸ்லிம்களிடையே பிளவுகளும், அகீதாவில் மாற்றமான வழி கெட்ட குழுக்களும் உருவாகி இன்று பல்கிப்பெருகி மார்க்கத்திலே குளறுபடிகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம். “நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலே இருப்பர்” என்று அல்-குர்ஆன் எச்சரிக்கிறது.

இது ஒருபுறமிருக்க........

இயற்கை வனப்புமிக்க எமது அட்டாளைச்சேனை கிராமத்திலே Facebook ன் பயன்பாடு அதிகரித்திருப்பதைவிட,  Fake ID எனும் போலிகளின் உருவாக்கமே வைரஸ்போல் பெருகிக்கிடக்கின்றன...... அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவரை தூற்றுவதற்கும், அவதூறு கூறுவதற்கும், இழிவுபடுத்துவதற்குமே இதனைப் பயன்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்.......

அரசியல் காரணங்களுக்காகவும், தனது சுயநலத்திற்காகவும் குறித்த நபரை இழிவுபடுத்துவதற்காகவும், அவர்பற்றி மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவும் குறித்த நபரின் நண்பர்கள்போல்  போலி Facebookகளை உருவாக்கி நயவஞ்சகத் தன்மையுடன் குறித்த நபரைப் போற்றுவதுபோல் வேஷமிட்டு, ஏனையோரை பெயர்சொல்லி அவமதித்து நாடகமாடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் செய்வதனூடாக குறித்த நபரை அவ் ஏனைய நபர்கள் வெறுக்கவேண்டுமெனவும், மக்களிடையே அவமானப்படவேண்டுமெனவும் திட்டமிட்டுச் செய்வதே அவர்களின் குறிக்கோள்...... நல்லதைச் சிந்திக்கின்ற மக்களாகிய நாம் இதனை நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும். உண்மையை ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும். “தன்னால் அவதூறு கூறப்பட்டவன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்”  என்பதை புறிந்துகொள்ளவேண்டும்.

ஆலமுல் Faனா எனும் இவ்வழிந்துபோகக்கூடிய உலகத்திலே அற்ப ஆசைகளுக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும் மக்களிடையே வதந்திகளைப் பரப்பி பிரிவினையை உண்டாக்குவது அல்லாஹ்வுக்கு மிகவு்ம் வெறுப்பானதும், சைத்தானுக்கு மிகவும் விருப்பமானதுமான செயலாகும்.

எனவே, 
கருத்துச் சுதந்திரமுள்ள எம் நாட்டிலே பொருத்தமான ஆதாரங்களுடன் சொந்த Facebookல் எழுதினால் உங்களை சமூகம் வரவேற்கும். அத்தோடு சமூகத்தின் நல்ல மாற்றத்திற்கு ஊன்றுகோளாகவும்  அமையும். 



“ஒவ்வொரு ஆத்மாவும் 
மரணத்தை சுவைத்தே தீரும்!”

0 comments:

Post a Comment