Sunday 10 January 2016

இலங்கை வரலாறு பகுதி 4

அரசியல்

காலிமுகத்திடலுக்கு அருகாமையிலுள்ள பழைய இலங்கைப் பாராளுமன்றக் கட்டடம். இது தற்போது சனாதிபதி செயலகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கை தெற்காசியாவிலேயே பழமை வாய்ந்த மக்களாட்சி முறையைக் கொண்டுள்ளது. 1931ல் டொனமூர் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட டொனமூர் அரசியலமைப்பு பொதுத் தேர்தல்களை நடத்தும் முறையை உருவாக்கியதோடு சர்வசன வாக்குரிமையையும் அறிமுகப்படுத்தியது. மேற்கு ஐரோப்பாவின் பேரரசுகளுக்கு உட்பட்ட வெள்ளையரல்லாத நாடு ஒன்று சர்வசன வாக்குரிமையையும் உள்நாட்டு விடயங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. சர்வசன வாக்குரிமை முறைக்கு அமைவான முதல் தேர்தல் இலங்கை அரசுக் கழகத்தினை அமைக்கும் முகமாக யூன் 1931ல் நடத்தப்பட்டது. சேர் D. B. செயதிலக கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1944ல், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குமுகமாக சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் D. S. சேனநாயக்க தலைமையில் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கமைவாக விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1947 பாராளுமன்றத் தேர்தல்களின் படி சேனநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டதோடு அதே வருடத்தில் அரசியலமைப்பும் நடைமுறைக்கு வந்தது. சோல்பரி அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்கு மேலாட்சி நிலை வழங்கப்பட்டதோடு 1948ல் இலங்கைக்கு விடுதலையும் கிடைத்தது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையின்படி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) வாரிசான மைய இடதுசாரி மற்றும் முற்போக்குவாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் (UPFA), இடது சாரி முதலாளித்துவவாத ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடையிலேயே போட்டி நிலவுகிறது. இலங்கையில் பலகட்சி மக்களாட்சி முறை நிலவுகிறது. இதற்கமைய பல சிறிய பௌத்த, சமவுடமை மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளன. யூலை 2011ன் படி, நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 67 ஆகும். இவற்றுள் 1935ல் உருவாக்கப்பட்ட லங்கா சமசமாசக் கட்சியே மிகவும் பழைமை வாய்ந்ததாகும். 1946ல் D. S. சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியே அண்மைக்காலம் வரை மிகப்பெரிய தனி அரசியற் கட்சியாக உள்ளது. விடுதலை பெற்றதிலிருந்து எல்லாப் பாராளுமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் வகித்துள்ள ஒரே அரசியற் குழு இதுவாகும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அமைச்சரவை அமைச்சராகப் பதவிவகித்த S. W. R. D. பண்டாரநாயக்கவால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. 1951 யூலையில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி இதனை உருவாக்கினார். சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1956ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. யூலை 1960 பாராளுமன்றத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டதோடு உலகின் முதற் பெண் அரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.
S. W. R. D. பண்டாரநாயக்கவின் சமகாலத்தவரான தமிழ்த் தேசியவாதியான G. G. பொன்னம்பலம் 1944ல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினை (ACTC) உருவாக்கினார். 1949ல், பொன்னம்பலம் D. S. சேனநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை எதிர்த்து S. J. V. செல்வநாயகம் தலைமையில் தமிழ்க் காங்கிரசிலிருந்து பிரிந்தோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியினை (ITAK) நிறுவினர். கூட்டாட்சிக் கட்சி என அழைக்கப்பட்ட இக்கட்சி அடுத்த இரு பத்தாண்டுகளில் இலங்கையின் முதன்மைத் தமிழ் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது. கூட்டாட்சிக் கட்சி சிங்களவருக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடித்தது. 1972ல் அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்ட அதேவேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் (ACTC) இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (ITAK) இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பொதுக் கட்சியை உருவாக்கினர். (இது பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்பட்டது.) 1970களின் பிற்பாதியில் ஆரம்பித்த தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அக்டோபர் 2001ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. 1965ல் ரோகண விசயவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட மாக்சிய-லெனினிய அரசியற் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசியல் அரங்கில் மூன்றாவது சக்தியாக உள்ளது."Revolutionary Idealism and Parliamentary Politics". Asia-Pacific Journal of Social Sciences (டிச. 2010).</ref> இக்கட்சி, ஏனைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாசக் கட்சி மற்றும் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றை விட இடதுசாரிக் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறது. 1981 உருவாக்கப்பட்ட சிறீலங்கா முசுலிம் காங்கிரசு இலங்கையின் மிகப்பெரிய முசுலிம் அரசியற் கட்சியாகும்.

அரசு

{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கையின் தேசியக் குறியீடுகள்
கொடிசிங்கக் கொடி
சின்னம்வாளேந்திய சிங்கம்
தேசிய கீதம்சிறீலங்கா தாயே
வண்ணத்துப் பூச்சிஇலங்கைப் பறவைச் சிறகு வண்ணத்துப் பூச்சி
பறவைஇலங்கைக் காட்டுக்கோழி
பூநீல அல்லி
மரம்நாகமரம்
விளையாட்டுகைப்பந்தாட்டம்
மிருகம்பழுப்பு மலை அணில்
மூலம்: 
இலங்கையின் மீயுயர்நீதிமன்றம், கொழும்பு.
இலங்கை ஒரு மக்களாட்சிக் குடியரசு ஒற்றையாட்சி நாடாகும். இது அரைச் சனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டு சனாதிபதி முறைமையினாலும் பாராளுமன்ற முறைமையினாலும் ஆட்சிசெய்யப்படுகிறது. பாராளுமன்றம் அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்குகிறது. அரசியலமைப்பின் பெரும்பாலான மூலங்கள் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மூலம் திருத்தப்படலாம். எனினும், மொழி, சமயம் மற்றும் இலங்கையை ஒற்றையாட்சி நாடாகக் குறிப்பிடல் போன்ற சில அடிப்படை மூலங்கள் திருத்தப்படுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு ஆகிய இரண்டும் அவசியமாகும்.
ஏனைய மக்களாட்சி அரசுகளைப் போன்றே இலங்கை அரசும் மூன்று கிளைகளைக் கொண்டுள்ளது:
  • நிறைவேற்றதிகாரம்: இலங்கையின் சனாதிபதியே நாட்டின் தலைவரும் ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியும் அரசின் தலைவரும் ஆவார். இவர் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தெரிவுசெய்யப்படுவார்.சனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்றும்போது பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவராவார். பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து சனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவைக்கு சனாதிபதியே தலைமை தாங்குவார். சனாதிபதி தனது பதவிக் காலத்தில் தன்னால் செய்யப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்தும் செய்யாமல் விட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக அவர்மீது விதிக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் நபரொருவர் இருதடவைகள் மாத்திரமே சனாதிபதி பதவி வகிக்க முடியும் எனும் சட்டம் இருந்தது. எனினும் 2010ல் கொண்டுவரப்பட்ட 18ம் திருத்தத்துக்கமைய ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.
  • சட்டவாக்கம்: இலங்கையின் பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக்கொண்ட ஓரவைச் சட்டவாக்கக் கழகமாகும். இவர்களில் 196 பேர் தேர்தல் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். ஏனைய 29 பேர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். உறுப்பினர்கள் சர்வசனவாக்குரிமையின் படி மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஆறு ஆண்டு காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பாராளுமன்றம் ஒருவருட காலம் செயற்பட்ட பின் அதில் கூட்டமொன்றை நடத்துவதற்கோ பாராளுமன்றக் கூட்டமொன்றை இடைநிறுத்துவதற்கோ அல்லது பாராளுமன்றக் கூட்டத்தை முடிவுறுத்துவதற்கோ அல்லது பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கோ சனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. பாராளுமன்றம் எல்லா வகையான சட்டங்களையும் இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. சனாதிபதியுடன் இணைந்து அவருக்குப் பதிலாகக் கடமையாற்றும் பிரதமர் பாராளுமன்றில் ஆளுங்கட்சியை வழிநடத்துவதோடு பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்றும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.
  • நீதி: இலங்கையின் நீதித்துறை அதன் உயர் நீதிவழங்கும் இடமாக மீயுயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றையும் உயர்நீதிமன்றங்களையும் மேலும் சில கீழ் நீதிமன்றங்களையும் கொண்டுள்ளது. மிகவும் சிக்கலான நீதி முறைமை பல்லினப் பண்பாட்டுத் தாக்கங்களைப் பிரதிபலிக்கிறது. குற்றவியல் சட்டம் பெரும்பாலும் பிரித்தானியச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படைக் குடியியற் சட்டம் ரோம மற்றும் டச்சுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.திருமணம், மணமுறிவு மற்றும் சொத்து தொடர்பான சட்டங்கள் பொதுச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. பண்டைய வழக்கங்கள் மற்றும் சமயம் என்பன காரணமாக, சிங்கள வழமைச் சட்டம் (கண்டியச் சட்டம்), தேசவழமை மற்றும் இசுலாமியச் சட்டம் என்பன பின்பற்றப்படுகின்றன. மீயுயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை சனாதிபதியே நியமிக்கிறார். பிரதம நீதியரசர் மற்றும் இரு மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிச்சேவை ஆணைக்குழு கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும், இடம்மாற்றும் மற்றும் பதவி நீக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

தொடரும்..........

0 comments:

Post a Comment