Thursday 14 January 2016

உலக வரலாற்றின் சமகால சகாப்தம்.... பகுதி 6


சவால்களும் சிக்கல்களும்


2000 வது ஆண்டில் உலகின் மொத்த சொத்து மற்றும் மக்கள்தொகைப் பகிர்வு.
தற்காலத்தில் உலகில் சில விவகாரங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகின் மொத்த செல்வத்தில் பெரும்பகுதி G8, மேற்கில் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள், சில ஆசிய நாடுகள் மற்றும் OPEC நாடுகள் ஆகியவற்றிலேயே குவிந்துள்ளதே அவை அனைத்திலும் முதன்மையான விவகாரமாகும். 2000 வது ஆண்டில் உலகின் மொத்த சொத்துகளின் 40% செல்வமிக்க 1% நபர்களுடையதாகவும் உலகின் 85% சொத்துகள் 10% நபர்களுடையதாகவும் இருந்தது.
உலகின் கீழ் அரைக்கோளத்திலமைந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் உலகின் மொத்த சொத்தில் வெறும் 1% க்கு மட்டுமே உரிமையாளர்களாக உள்ளனர். உலகின் வீட்டுச் சொத்தில் பாதிக்கும் மேலானதை உலகின் செல்வந்தர்களான 2% நபர்களே கொண்டுள்ளனர் எனக் கூறும் மற்றொரு ஆய்வு. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தப் பகிர்வானது உலக செல்வங்கள் குவிந்துள்ள பகுதியின் திசையை நோக்கி வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. இருப்பினும், பெரிய பொருளாதாரங்களையும் பணக்காரர்களையும் கொண்டுள்ள [[சக்திமிக்க நாடு0}கள் மூன்றாம் உலக|சக்திமிக்க நாடு0}கள் மூன்றாம் உலக]] நாடுகளின் துரிதமாக முன்னேறிவரும் பொருளாதாரங்களை மேம்படுத்த முடியும். இருப்பினும், வளரும் நாடுகள் பல சவால்களைச் சந்தித்துவருகின்றன. அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பணிகளின் அளவு, விரைவாக அதிகரித்துவரும் மக்கள் தொகக மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய தேவை மற்றும் இது போன்ற செயல்களைச் செய்து முடிக்க ஆகும் செலவுகளை எதிர்கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.
இரண்டாவதாக, உலகின் பல பகுதிகளில் நோயானது நிலைத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது. SARS, வெஸ்ட் நைல் மற்றும் பறவைக் காய்ச்சல்போன்ற புதிய வைரஸ்கள் தொடர்ந்து எளிதாகவும் வேகமாகவும் பரவிவருகின்றன. ஏழை நாடுகளில் மலேரியா மற்றும் பிற நோய்கள் மக்களில் பெரும்பகுதியினரை பாதித்துள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV என்னும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கொள்ளை நோய் வைரஸாக மாறிவந்தது.
தீவிரவாதம், சர்வாதிகாரம் மற்றும் அணு ஆயுதங்களின் பரவல் ஆகியவையும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விவகாரங்களாக இருந்தன. வட கொரியாவில் (North Korea) இருந்த கிம் ஜாங்-இல் (Kim Jong-il) போன்ற சர்வாதிகாரிகள் தங்கள் நாடுகளில் அணு ஆயுத உருவாக்கத்தை நோக்கிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர். தீவிரவாதிகள் அணு ஆயுதங்களைப் பெற முயற்சிப்பது குறித்து அச்சம் இருக்காமல், அவர்கள் அதை முன்பே பெற்றுவிட்டனர் என்பதே அச்சமாக இருந்தது.

காலநிலை மாற்றம்


காலநிலை மாற்றம் தற்கால சுற்றுச்சூழலின் காலநிலையை உணர்த்துகிறது. கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களே புவி வெப்பமடைதல் (global warming) நிகழ்வுக்க் காரணமான பல காரணிகளுக்குப் பொறுப்பானவை எனக் கருதப்படுகின்றன. இந்த புவி வெப்பமடைதல் என்பது 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து புவிப்பரப்புக்கு அருகிலுள்ள காற்று மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பும் கணிக்கப்பட்ட அதன் தொடர்ச்சியுமாகும். இயற்கைச் சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்க்கை ஆகிய இரண்டிலுமான சில விளைவுகளுக்கு ஒரு பகுதியாகவேனும் இந்த புவி வெப்பமடைதல் நிகழ்வு காரணமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட IPCC இன் ஓர் அறிக்கையானது, பனிப்பாறை நகர்வு, லார்சன் ஐஸ் ஷெல்ஃப் (Larsen Ice Shelf) போன்ற ஐஸ் ஷெல்ஃப் (கடலிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பனிப்பாறை) உடைதல், கடல்மட்ட உயர்வு, மழை பொழிவு விதங்களிலான மாற்றங்கள் மற்றும் காலநிலையை பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் ஆகியவற்றுக்கும் புவி வெப்பமடைதல் ஒரு பகுதியளவில் காரணமாக இருப்பதாகக் கருதப்படுகிறது எனக் கூறுகிறது. சில பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை, வேறு சில பகுதிகளில் விழ்ப்படிவு அதிகரிப்பு, மலைப்பனி அடுக்குகள் அதிகரிப்பு மற்றும் வெப்பமிக்க வெப்பநிலைகளினால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகள் போன்றவை எதிர்பார்க்கப்படும் பிற விளைவுகளில் அடங்கும். இருப்பினும், புவி வெப்பமடைதலின் இயல்பு, காரணங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பான புவி வெப்பமடைதல் சர்ச்சை ஒன்றும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்வது முக்கியமாகும்.
வழக்கமாக குறிப்பிட்ட காலநிலை தொடர்பான நிகழ்வுகளை உலகிலுள்ள மனிதர்களின் மீது ஏற்படும் தாக்கத்துடன் தொடர்புபடுத்துவது சாத்தியமற்றதாகும். அதற்கு மாறாக, அப்படிப்பட்ட தாக்கம் காலநிலை தொடர்பான நிகழ்வுகளின் ஒட்டுமொத்த பகிர்வு மற்றும் செறிவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதீத வீழ்ப்படிவின் நிகழ்வெண் மற்றும் செறிவில் ஏற்படும் மாற்றங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கருதலாம். இதில் எதிர்பார்க்கப்படும் பரவலான விளைவுகளில் பனிப்பாறை நகர்வுகள், ஆர்ட்டிக் சுருக்கம் மற்றும் உலகளவில் கடல் மட்ட உயர்வு ஆகியவை அடங்கும். பயிர் விளைச்சலில் ஏற்படும் மாற்றங்கள் புதிய வர்த்தக பாதைகள் உருவாதல், உயிரின அழிவுகள் மற்றும் நோய்ப் பரப்புக்காரணிகளின் வரம்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை பிற விளைவுகளில் அடங்கும்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்


வளர்ந்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள், சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றால் எதிர்கால பாதிப்புகளுக்கான சாத்தியம் உருவாகியுள்ளது போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், உயிர்தொழில்நுட்பம், ரோபோவியல் மற்றும் பயன்படு எந்திரவியல் மற்றும் பொருள் அறிவியல் ஆகியவை உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புகளில் ஏற்படும் பல்வேறு முக்கிய மேம்பாடுகள் இந்த வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் அடங்கும். தொழில்நுட்பங்களினால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் அல்லது பயன்பாடு கொண்ட வளரும் திறன் ஆகியவற்றைப் பற்றிய சர்ச்சை போன்றவை இவற்றின் நிலை மற்றும் சாத்தியமுள்ள விளைவுகளுடன் தொடர்புடையவையாக உள்ளன. இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட துறைக்குள்ளான புதிய மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது; முன்னர் தனித்தனியாக இருந்த தொழில்நுட்பங்கள் இப்போது ஏதேனும் வழியில் ஒருங்கிணைந்து செல்லும் போக்கை அடைவதை ஒருங்கிணைந்துவரும் தொழில்நுட்பங்கள் காட்டுகின்றன.

0 comments:

Post a Comment