Sunday 10 January 2016

இலங்கை வரலாறு பகுதி 7

இலங்கை மக்கட்சமூகம்

முதன்மைக் கட்டுரை: மக்கள் சமூகம், இலங்கை
இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களைப் பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாச்சாரங்களையும் பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பொதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சனைகள் தோன்றியுள்ளன.

மக்கள் தொகை

இலங்கையின் மக்கள்தொகை 20.869 (2011 ம் ஆண்டைய கணக்கெடுப்பின் படி) மில்லியன் ஆகும். இலங்கை ஒரு வளர்முக நாடாகவிருந்த போதும், வளர்ந்த நாடுகளை விஞ்சும் அளவிற்கு அதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. மேலும் இது மிகவுயர்ந்த வாழ்க்கை சுட்டெண்ணைகொண்டுள்ளது. இலங்கையின் ஆண்/பெண் பால் விகிதாசாரம் 0.98 என உள்ளது, இது தென்னாசியாவில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடும் பொது எதிர்மாறான தன்மையைக் காட்டுகின்றது.

கல்வி

இலங்கை மக்களின் எழுத்தறிவு 92.5% ஆகும். இது வளர்ந்துவரும் நாடுகள் வரிசையில் எழுத்தறிவில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாகும். இளைஞர்களின் எழுத்தறிவு 98% ஆக உள்ளது. கணினியியல் அறிவு வீதம் 35% ஆக உள்ளது. ஆரம்பப்பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் வீதம் 99% இலும் அதிகமாகும். இலங்கைக் கல்வித் திட்டத்தில் 9 ஆண்டுகள் கட்டாயப் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. கி. வி. வி. கன்னங்கராவின் முயற்சியில் 1945 ஆம் ஆண்டில் இலங்கையில் இலவசக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி இலவசமாக வழங்கப்படும் உலகின் ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கையின் கிராமப் பகுதி சிறார்களுக்குக் கல்வி வழங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில் மத்திய மகா வித்தியாலயங்கள் அமைக்கும் திட்டத்தைக் கன்னங்கரா அறிமுகப்படுத்தினார். 1942 இல் மக்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காகப் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980களின் இறுதியில் மாகாணசபைகள் அமைக்கப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சின் அதிகாரங்கள் சில மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்படி, தேசியப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு அவை நடுவண் அரசின் கல்வி அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஏனைய பாடசாலைகள் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரப்பட்டன. இலங்கையில் ஏறத்தாழ 9675 அரசுப் பாடசாலைகளும், 817 தனியார் பாடசாலைகளும், பிரிவேனாக்களும் உள்ளன. 15 அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

தேசிய இனங்கள்

இலங்கையின் பெரும்பான்மை இனம் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 74%மாக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கியஇனமாகத் தமிழர் உள்ளார்கள். நாட்டின் சனத்தொகையில் 15.4%மான இவர்கள், இலங்கை தமிழர் மற்றும் இந்திய தமிழரென இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கை தமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இலங்கையின் அடுத்த முக்கிய இனமாகச் சோனகர் 10% உள்ளார்கள்.இவர்கள் தமிழ் பேசக்கூடியவர்களாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் கண்டி, கொழும்பு போன்ற இடங்களில் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர். அத்தோடு இதர இனங்களாகப் பறங்கியர் (ஐரோபிய வழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.

தேசிய சமயம்

முதன்மைக் கட்டுரை: இலங்கையின் அரச சமயம்
இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (70.19%), இந்து சமயம் (12.61%) இஸ்லாம் (9.71%) கிறிஸ்தவம் (7.45%) ஆக உள்ளன. சிங்களவர்பெரும்பாலாகத் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுபவர்களாகவும், தமிழர் பெரும்பாலாகச் சைவ சமயிகளாகவும் உள்ளனர். சிங்களவர்களிலும், தமிழர்களிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். சோனகர் என்ற இனத்தைச் சேர்ந்த முஸ்லிங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவோராகவும், பெரும்பாலும் தமிழ் பேசக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் பௌத்த சமயத்தை முதன்மைப்படுத்தி, அதைப் பேணுவதை அரச கடமையாக வரையறை செய்கிறது.
இலங்கையில் சமயம்
சமயம்வீதம்
பௌத்தம்
  
70.19%
இந்து
  
12.61%
இசுலாம்
  
9.71%
கிறித்தவம்
  
7.45%
மூலம்: 2011 சனத்தொகை மதிப்பீடு

தேசிய மொழிகள்

முதன்மைக் கட்டுரை: மக்கள் சமூகம், இலங்கை#தேசிய மொழிகள்
இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும், சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும்,ஆங்கிலம் வணிகத்துறையிலும் பெரும்பான்மையாகப் பயன்பாட்டிலுள்ளது. 1987-ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழும், சிங்களமும் அரசுகரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அரசியல்யாப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம்பரவலாக இலங்கையில் உபயோகத்தில் உள்ள போதிலும், பரங்கியர் மட்டுமே இதைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். பௌத்த சமயம் இலங்கையில் 69 வீதமாகக் காணப்படும் அதே வேளை இந்து சமயம் 12 வீதமாகவும் இஸ்லாம் 10 வீதமாகவும் கிறிஸ்த்தவம் 7 வீதமாகவும் காணப்படுகின்றது.

சமூக கட்டமைப்பு

முதன்மைக் கட்டுரை: மக்கள் சமூகம், இலங்கை#சமூக கட்டமைப்பு
குடும்ப அமைப்பு: இலங்கையில் உள்ள அனைத்து இனங்களும் மிக முக்கியமாகக் கருதும் சமூகவலகு குடும்பமே ஆகும். இதன் கூறுகளாகக் கணவன், மனைவி, பிள்ளைகள் உள்ளனர். நாட்டின் அனேக குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்த பொழுதும் தற்பொது உள்ள யுத்த, பொருளாதார காரணங்களால் அனுக்குடும்பங்கள் பிரபலமாகிவருகின்றன. கூட்டு குடும்பங்களில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக உள்ளதுடன், குடும்பப் பிரசினைகளை சுமுகமாகத் தீர்த்தும் வைக்கின்றனர்.
இலங்கை உறவுமுறைகள் தென்னாசிய உறவுமுறைகளை ஒத்ததாகவே உள்ளன. திருமணங்கள் அனேகமாக நிச்சயிக்கப்பட்டவையாக உள்ளபோதும், காதல் திருமணங்களும் ஒத்துக்கொள்ளப்பட்டவையாகவே உள்ளன. நிச்சயிக்கும் திருமணங்கள் முதல் மைத்துனர்களுக்கிடையே அனேகமாக முடிவுசெய்யப்பட்டு வந்திருந்தாலும், தற்போது அந்நிலையில பெரிய மாற்றமேற்பட்டுள்ளது.
மிகப் பெரும்பான்மையான திருமணங்கள் ஏகதாரமணங்களாகவே அமைகின்றன. பல்தாரமணங்கள் சட்டவிரோதமனவையாகவும், சமூகத்தால் நிராகரிக்கபட்டவையாகவும் உள்ளன. ஆனால் செல்வந்த முஸ்லிம்கள், குடும்பங்களைப் பராமரிக்க முடியுமானால் பல மனைவிகளை மணந்து கொள்ளலாம். மேலும் மலைநாட்டு சிங்களவர்களிடையே ஒரு பெண் பல கணவர்களை மணப்பது வழக்காக உள்ளது, இதை ஆங்கிலேயர் தடைசெய்த போதும், தற்பொழும் இது சகசமாகவே உள்ளது. இவ்வழக்கு கீழ்நாட்டு சிங்களவர்களிடையேயும் ஒரு காலத்தில் நிலவியபோதும் போர்த்துகீசர் இதை அகற்றினார்கள். தமிழரிடையே இவ்வழக்கு போர்த்துகீசர் வருகைக்குமுன் நிலவியதா என்பதற்குரிய சான்றுகள் கிடைத்தில.
சாதி அமைப்பு: இலங்கை சமூக கட்டமைப்பின் அடித்தளமாகப் பிறப்பை அடிப்படையாகக்கொண்ட சாதி அதிகாரப்படிநிலையே காணப்படுகின்றது. இந்தச் சாதிக்கட்டமைப்பு சமயம், தொழில், பொருளாதாரம் போன்ற விடயங்களில் ஒருவரின் சமூக நிலையினை நிர்ணயிக்கின்றது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால், மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படலாயின. தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும், நாட்டின் அரசியலிலும், திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி இன்னமும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
றோடி எனப்படும் சாதியினரே இலங்கையின் மிகக் கீழ் சாதியினர் ஆவர். சிங்கள அரசவம்சத்தில் றோடியர்கள் தோன்றிய பொதும், இவர்களின் முன்னோர்கள் நரமாமிசம் உட்கொண்டமையால் இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். இவர்களைத் தீண்டுவது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. இவர்கள் குப்பாயம் எனும் ஒதுக்குப்புற பகுதிகளில் வசிக்க வேண்டியிருந்ததுடன், மேலும் றோடிய ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேல் உடையணிய தடைசெய்யப்பட்டிருந்தனர்.

தொடரும்...

0 comments:

Post a Comment