Thursday, 14 January 2016

கௌரவ மைத்திரிபால சிறிசேன - இலங்கையின் ஜனாதிபதி


மைத்திரிபால சிறிசேன 

(Maithripala Sirisenaசிங்களம்මෛත්‍රිපාල සිරිසේන
என்று அழைக்கப்படும் பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன (பிறப்பு: 3 செப்டம்பர் 1951) இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் ஆவார். 1989 இல் அரசியலில் நுழைந்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். பாதுகாப்புப் பதில் அமைச்சராகவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2014 நவம்பர் 21 அன்று அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தார். சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, புதிய சனநாயக முன்னணியின்சார்பில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடக்க நாட்கள்

1951 இல் பொலன்னறுவையில்  விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த சிறிசேன பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் பயின்று 1973 ஆம் ஆண்டில் பட்டயப் படிப்பை முடித்தார். 1971 ஜேவிபி புரட்சியின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1980 இல் இவர் உருசியாவின் மாக்சிம் கோர்க்கி கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டயம் பெற்றார்.

அரசியல்

1979 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேன இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆற்றுப் பெருநிலம் மற்றும் ரஜரட்டை அபிவிருத்தி அமைச்சராகவும், விவசாய அபிவிருத்தி, வேளாண் சேவைகள் அமைச்சராகவும், இறுதியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் 2014 நவம்பர் 21 வரை பதவியில் இருந்தார்.
அக்டோபர் 9, 2008 அன்று கொழும்பின் புறநகரான பிலியந்தலை, பொரலஸ்கமுவ என்ற இடத்தில் சிறிசேன சென்ற வாகன அணித் தொடர் மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சென்ற வாகனம் தாக்குதலில் இருந்து தப்பியது. ஆனாலும் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

அரசுத்தலைவர்

பல வாரங்களாக ஊடகங்களில் இடம்பெற்றுவந்த ஊகங்களுக்கு இடையே, சிறிசேன நவம்பர் 21, 2014 அன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருந்து மேலும் பல கட்சி உறுப்பினர்களுடன் விலகி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து கொண்டார். சனவரி 8, 2015 அரசுத் தலைவர் தேர்தலில் இவர் பொது எதிர்க்கட்சி வேட்பாளராக மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டார். இலங்கையின் அனைத்து நிருவாகக் கூறுகளும் ராசபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஊழல், உறவினருக்கான சலுகை போன்றவற்றால் இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தாம் பதவிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப் போவதாகக் கூறினார். இவரது கட்சித் தாவலை அடுத்து, இவரது அமைச்சுப் பதவியும், கட்சிச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
முக்கிய எதிர்க்கட்சியான ஐதேகவின் ஆதரவைப் பெற்றதோடு, முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா, ஆளும் கட்சி உறுப்பினர்கள் (துமிந்த திசாநாயக்க, ராஜித சேனாரத்தின, ரஜீவ விஜேசிங்க) பலரும் சிறிசேனவிற்கு ஆதரவளித்தனர்.
2015 சனவரி 8 இல் நடைபெற்ற தேர்தலில் சிறிசேன 51.28% வாக்குகள் பெற்றார். 2015 சனவரி 9 அன்று இலங்கையின் 6வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக சிறிசேன உச்சநீதிமன்ற நீதியரசர் க. சிறீபவன் முன்னிலையில் பதவியேற்றார்.

இலங்கையின் ஜனாதிபதிகள்

கட்சிகள்
      ஐக்கிய தேசியக் கட்சி       இலங்கை சுதந்திரக் கட்சி       சுயேட்சை (அரசியல்வாதி)

பெயர்படம்பதவி ஏற்புபதவி விலகல்அரசியல் கட்சிகுறிப்பிடத்தக்க நிகழ்வுகளும் சாதனைகளும்
1வில்லியம் கொபல்லாவ
(1897–1981)
William Gopallawa.jpg22 மே 19724 பெப்ரவரி 1978கட்சி இல்லைகோபல்லாவை கடைசி மகாதேசாதிபதியும், 1972 இல் இலங்கை குடியரசாகஅறிவிக்கப்பட்டு பெயரும் சிறீ லங்கா என மாற்றப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த முதலாவது நிறைவேற்றதிகாரமற்ற சனாதிபதியும் ஆவார்.
2ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
(1906–1996)
Junius Richard Jayawardana (1906-1996).jpg4 பெப்ரவரி 19782 சனவரி 1989ஐக்கிய தேசியக் கட்சி1978 இல் ஜெயவர்தனா நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் முறைமையை கொண்டு வந்தார். இவரே முதலாவதுஅரசுத்தலைவரும் ஆவார்.
3ரணசிங்க பிரேமதாசா
(1924–1993)
Premadasa.jpeg2 சனவரி 19891 மே 1993ஐக்கிய தேசியக் கட்சிபிரேமதாசா 1993 மே நாள் ஊர்வலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
4டிங்கிரி பண்டா விஜயதுங்கா
(1916–2008)
Wijetunga.jpg2 மே 199312 நவம்பர் 1994ஐக்கிய தேசியக் கட்சிஅரசுத்தலைவர் பிரேமதாசா கொல்லப்பட்ட பின்னர், விஜயதுங்க அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
5சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
(1945–)
Chandrika Kumaratunga.jpg12 நவம்பர் 199419 நவம்பர் 2005இலங்கை சுதந்திரக் கட்சி
(மக்கள் கூட்டணி)
சந்திரிக்கா குமாரதுங்க பல முறை படுகொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனாலும் அத்தாக்குதல்கள் எவையும் வெற்றி பெறவில்லை.
6மகிந்த ராசபக்ச
(1945–)
WEF on the Middle East Arab and foreign Ministers Crop.jpg19 நவம்பர் 20058 சனவரி 2015இலங்கை சுதந்திரக் கட்சி
(ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
25-ஆண்டுகால ஈழப்போர் இவரது காலத்தில் முடிவுக்கு வந்தது. போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது திருத்தம், 2015 தேர்தலில் தோல்வி.
7மைத்திரிபால சிறிசேன(1951–)Maithripala Sirisena (cropped).jpg8 சனவரி 2015இன்று வரைஇலங்கை சுதந்திரக் கட்சி
(ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் 2015 தேர்தலில் வெற்றி.

0 comments:

Post a Comment