Sunday, 10 January 2016

இலங்கை வரலாறு பகுதி 8

கலாசாரம்

முதன்மைக் கட்டுரை: இலங்கையின் கலாசாரம்
வவுனியாவில் காவடி எடுக்கும் பக்தர்கள்
இலங்கையின் கலாசாரம் உலகின் முக்கிய கலாச்சாரங்களில் ஒன்று. இது நால்விதமான இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி ஒரு கலவையாக வெளிப்பட்டு நிற்கின்றது. இக்கலாசாரம் உயரிய, பலக்கிய, பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இலங்கையின் கலாசாரம் பல தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது.
கர்நாடக இசை, கண்டிய இசை ஆகிய இரு முக்கிய நெறி இசை மரபுகள் உள்ளன. கர்நாடக இசை தமிழர்இடமும், கண்டிய இசை சிங்களவர் இடமும் தோற்றம் கொண்டன. இவை தவிர நாட்டார் இசை,இஸ்லாமிய இசை, பறங்கிய இசை எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. நடனக்கலையில் பரத நாட்டியம், கண்டிய நாட்டியம் ஆகிய இரு நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம்மூலம் கதை பரிமாறப்படுகின்றது. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும்உண்டு.
தமிழ், பாளி, சிங்களம், ஆங்கிலம் போன்ற பல முக்கிய மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இலங்கையின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன.
கொண்டாட்டங்கள் இலங்கை கலாசாரத்தின், வாழ்வியலின் இணைபிரியா அம்சங்கள் ஆகும். விசாக பௌர்ணமி, பொசன் பௌர்ணமி, தமிழ் சிங்கள புத்தாண்டு, பொங்கல், மகா சிவராத்திரி, தீபாவளி எனக் கொண்டாட்டங்கள் பல உண்டு. சுதந்திர தினம்,தமிழ் சிங்கள புத்தாண்டு போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.
சிங்களவர் தமிழர் இன வேறுபாடின்றி வேட்டி, சேலை போன்ற ஆடைகளையே தமது தேசிய உடைகளாகக் கொண்டுள்ளனர், இவையே நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும் கோதுமையுமே இலங்கை உணவு வகைகளைத் தயாரிப்பதில் முக்கியப்பங்கு கொள்கின்றன.சோறு, இடியப்பம், பாண், பிட்டு, அப்பம் ஆகியவை இலங்கையர் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.
கண்டிய நடனம்
இலங்கையரின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. சிங்களம்,தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும், இந்தி,தமிழ் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
உலகமயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இலங்கை கலாசாரத்தை குறிப்பிடத் தக்க அளவுமேல் நாட்டு கலாசாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன மேலைத்திய இசை, இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு/உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.
பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இலங்கை கலாசாரத்தின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய பண்புகள் இன்னும் நீர்த்துப்போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.

விளையாட்டு

இலங்கை துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவுடனான இருபது20 துடுப்பாட்டப் போட்டிக்கு முன்பாக பல்லேகல துடுப்பாட்ட மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகையில், 2011 ஆகஸ்டு.
இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாட்டம், எனினும் மிகப்பிரபலமான விளையாட்டாகத் துடுப்பாட்டம் காணப்படுகிறது. ரக்பி, கால்பந்தாட்டம், டெனிசு, தடகள விளையாட்டுக்களும் ஓரளவு பிரபலமானவை. இங்கு பாடசாலை மாணவர்களிற்கு மாகாண, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
இலங்கைத் துடுப்பாட்ட அணி 1990களின் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பன்னாட்டளவில் பெறத் தொடங்கியது, உச்சக்கட்டமாக 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையையும் 2014 ஆம் ஆண்டு ஐசிசி உலக இருபது20 கோப்பையையும் வென்றது,2007, 2011 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிகளிலும் 2009, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகளிலும் 2ஆம் இடத்தைப் பெற்றது. 1986, 1997, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1996, 2011 ஆண்டுகளில் உலகக்கிண்ண போட்டிகளைப் பிறநாடுகளுடன் இணைந்து நடாத்தியது, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகைளையும் நடத்தியிருக்கிறது.
இலங்கைக்கு இதுவரை இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைத்துள்ளன, ஒரு வெள்ளிப்பதக்கம் டங்கன் வைட்டிற்கு 1948 இலண்டன் ஒலிம்பிக்கில் 400மீ தடைதாண்டி ஓட்டத்திற்காகவும் மற்றொரு வெள்ளிப்பதக்கம் சுசந்திகா ஜயசிங்கவிற்கு 200மீ ஓட்டத்திற்காகச் சிட்னி ஒலிம்பிக்கிலும் கிடைத்தன.

பாதுகாப்பு கட்டமைப்பு

நீதித்துறை

இலங்கையின் நீதித்துறை ஒரு மீயுயர் நீதிமன்றம், ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பல்-கலாசாரங்கள் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்பாகவே இலங்கையின் சட்ட முறைமை அமைந்துள்ளது. குற்றவியற் சட்டங்கள் ஆங்கிலச் சட்ட முறையைப் பின்பற்றி அமைந்துள்ளதுடன், அடிப்படை குடியியற் சட்டங்கள்உரோம, ஒல்லாந்து சட்டங்களாக உள்ளன. மேலும் இனரீதியான திருமண, மரபுரிமை சம்பந்தமான பொதுச் சட்டங்களும் உள்ளன. இன, மத வாரியாக பண்டைய வழக்க அடிப்படையில் இயற்றப்பட்ட கண்டிச் சட்டம், தேசவழமைச் சட்டம், சரியா சட்டம் ஆகியவையும் சில இடங்களில் வழக்கிலுள்ளன. நிறைவேற்றதிகாரம் கொண்ட இலங்கை சனாதிபதி மீயுயர், மேன்முறையீட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார். தலைமை நீதிபதி, மற்றும் இரண்டு மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச்சேவை ஆணைக்குழு கீழ்நீதிமன்றங்களின் நியமனங்களைக் கவனிக்கிறது.

இலங்கை காவற்துறை

இலங்கையின் தேசிய காவற்துறையே நாட்டின் சட்டவொழுங்கைப் பாதுகாக்கின்ற பிரதான அரச அமைப்பாகும். இதன் பணிகளாக நாட்டின் உட்பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு என்பனவேயிருந்த போதினும்கூட, இது இலங்கையின் பாதுகாப்பு படைகளின் உள்ளிணைந்த அங்கமாகக் காணப்படுகின்றது. மேலும் தேசிய காவற்துறையின் விசேடமாகப் பயிற்றப்பட்ட அதிரடிப்படையினர், முப்படைகளுடன் கூட்டு நடவடிக்கைகளிலும் அனேகமாக ஈடுபடுத்தப்படுகினறனர்.
இலங்கையின் காவற்துறை வரலாறு மிகவும் பழைமை வாய்ந்ததாகக் காணப்பட்ட போதினும்கூட, நவீன அம்சங்கள் பொருந்திய காவற்துறையானதுஒல்லாந்தருடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெவ்வேறு கூறுகளாகவிருந்த காவற்துறை 1858 இல் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1866 இல் இலங்கை காவற் திணைக்களம் உருவாக்கப்பட்டது.
1858 இல் இருந்து பெரும் மாற்றம் ஏதுமில்லாதிருந்த காவற்துறை 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 17வது அரசியலமைப்பு திருத்தசட்டத்தின்மூலம் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை தேசிய காவற்துறை இயங்குகின்றபோதிலும், அதன் நாளாந்த பணிகளை நடாத்தி செல்கின்றவர் காவல்துறை மாஅதிபர் ஆவார். இவர் காவற்துறை ஆணைக்குழுவால் நியமிக்கப்படாத போதும் அவரின் அனைத்து அதிகாரங்களும், தேசிய காவற்துறை ஆணைக்குழுவிலிருந்தே பெறப்படுகின்றன.

பாதுகாப்பு படைகள்

முதன்மைக் கட்டுரை: இலங்கையின் பாதுகாப்பு படைகள்
இலங்கையின் முப்படைகளாவன இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை ஆகும். இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இலங்கை அரசியல்யாப்பின் கீழ் சனாதிபதியே முப்படை தளபதியாகக் கொள்ளப்படுகிறார். சுதந்திரமடைந்தபோது இலங்கையின்பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் தற்போது அது 2% ஆகக் குறைந்துள்ளது.
1970ம் ஆண்டு வரை சம்பிரதாயபூர்வமாக இருந்த படைகள், 1971ம் ஆண்டு இடம்பெற்ற மார்சிச புரட்சியைத் தொடர்ந்து வலுப்பெறத்தொடங்கின. பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு போர், இனப்பிரச்சனை காரணமாகத் தற்போது இவை உலகில் அதிக போர் பயிற்சி பெற்ற படைகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.
இலங்கை படைபலம் சம்பந்தமான சில புள்ளிவிபரங்கள்:
  • இலங்கை இராணுவம் 90,000
  • இலங்கை கடற்படை 20,000
  • இலங்கை விமானப்படை 10,000

தொடரும்..........

0 comments:

Post a Comment