Sunday 10 January 2016

இலங்கை வரலாறு பாகுதி 5

நிர்வாகப் பிரிவுகள்

Sri Lankan Provinces and districts.PNG
வங்காள விரிகுடா
பாக்கு நீரிணை
வட மாகாணம்
மன்னார்
வளைகுடா
வட மத்திய மாகாணம்
வட மேல் மாகாணம்
கிழக்கு மாகாணம்
மத்திய மாகாணம்
ஊவா மாகாணம்
மேல் மாகாணம்
சபரகமுவா மாகாணம்
தென் மாகாணம்
இந்து சமுத்திரம்
Flag of the Northern Province.svg
Flag of the North Central Province (Sri Lanka).PNG
Flag of the North Western Province (Sri Lanka).PNG
Eastern Province Flag (SRI LANKA).png
Central Province.png
Flag of the Uva Province (Sri Lanka).PNG
Western Province Flag (SRI LANKA).png
Flag of the Sabaragamuwa Province (Sri Lanka).PNG
Flag of the Southern Province (Sri Lanka).PNG
நிர்வாகத் தேவைகளுக்காக இலங்கை ஒன்பது மாகாணங்களாகவும் இருபத்தைந்து மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்கள் 19ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் மாகாணங்கள் (சிங்களம்:පළාතஆங்கிலம்:Province) காணப்பட்டாலும் அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கவில்லை. எனினும், பல பத்தாண்டு கால அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புக்கான 13ம் திருத்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாண சபையும் எந்த அமைச்சினாலும் கட்டுப்படுத்தப்படாத சுயாதீன அமைப்பாகும். இதன் சில செயற்பாடுகள் மைய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் மற்றும் அதிகார சபைகள் என்பவற்றால் கையாளப்படுகின்றன. எனினும், காணி மற்றும் காவல் துறைக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை. 1989 க்கும் 2006க்கும் இடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணமாக ஆக்கப்பட்டது.1987க்கு முன், மாகாணங்களுக்கு உரிய நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட அடிப்படையிலான நிர்வாகச் சேவையினால் கையாளப்பட்டன. இச்சேவை குடியேற்றக் காலத்திலிருந்து காணப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு மாகாணமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.
இலங்கையின் நிர்வாகப் பிரிவுகள்
மாகாணம்தலைநகர்பரப்பளவு (km²)பரப்பளவு
(சதுர மைல்)
சனத்தொகை
மத்திய மாகாணம்கண்டி5,6742,191
2,556,774
கிழக்குதிருகோணமலை9,9963,859
1,547,377
வட மத்திய மாகாணம்அநுராதபுரம்10,7144,137
1,259,421
வடக்குயாழ்ப்பாணம்8,8843,430
1,060,023
வட மேற்குகுருநாகல்7,8123,016
2,372,185
சபரகமுவஇரத்தினபுரி4,9021,893
1,919,478
தெற்குகாலி5,5592,146
2,465,626
ஊவாபதுளை8,4883,277
1,259,419
மேற்குகொழும்பு3,7091,432
5,837,294
மாவட்டங்களும் உள்ளூராட்சிச் சபைகளும் இலங்கை 25 மாவட்டங்களாகப் (சிங்களம்: දිස්ත්‍රි‌ක්‌ක ஒருமை දිස්ත්‍රික්කය ஆங்கிலம்:District) பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது, மாவட்டங்கள் 256 பிரதேசச் செயலகங்களாகவும், மேலும் 14,008 கிராம சேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் சிங்களத்தில் திசா என அழைக்கப்படும். மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் அரசாங்க அதிபரால் மாவட்டம் நிர்வகிக்கப்படும்.
இவற்றை விட மூன்று வகையான உள்ளூர் அதிகார மன்றங்கள் காணப்படுகின்றன. அவை, மாநகர சபைகள் (18), நகர சபைகள் (14) மற்றும் பிரதேச சபைகள் (256) என்பனவாகும். உள்ளூர் அதிகார மன்றங்கள், முற்கால கோரளை மற்றும் ரட ஆகிய மானியமுறைப் பிரிவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இவை முன்னர் பிரதேச இறைவரி அதிகாரிப் பிரிவு என அறியப்பட்டன. பின்னர் இப்பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என மாற்றப்பட்டது. தற்போது இப்பிரிவு பிரதேசச் செயலகம் என மாற்றப்பட்டு பிரதேசச் செயலாளரினால் நிர்வகிக்கப்படுகிறது.

புவியியல்

A roughly oval island with a mountainous center
இலங்கையின் அளவையியல் தேசப்படம்.
இலங்கை இந்தோ-ஆசுதிரேலியத் தட்டின் ஒரு பகுதியான இந்தியப் புவித்தட்டிலேயே அமைந்துள்ளது. இது இந்து சமுத்திரத்தில் வங்காள விரிகுடாவுக்குத் தென்மேற்கே, 5° மற்றும் 10°N அகலக்கோடுகளுக்கிடையிலும், 79° மற்றும் 82°E நெடுங்கோடுகளுக்கிடையிலும் அமைந்துள்ளது. இலங்கை இந்திய உபகண்டத்திலிருந்து பாக்கு நீரிணையாலும் மன்னார் வளைகுடாவாலும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்துப் புராணங்களின்படி, இலங்கைக்கும் இந்திய நிலப்பரப்புக்குமிடையில் ஒரு நிலப்பாலம் காணப்பட்டது. எனினும் தற்போது ஒரு சில சுண்ணக்கற் திட்டுக்களே காணப்படுகின்றன. கிபி 1480ம் ஆண்டு வரை இப்பாலம் காணப்பட்டதாகவும், பின்னர் புயற் காற்றினால் கால்வாய் ஆழமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மசுகெலியாவிலிருந்து சிவனொளிபாதத்தின் காட்சி.
இலங்கைத்தீவு தட்டையான கரையோரங்களையும், தென் மத்திய பகுதியில் மலைகளையும் கொண்டுள்ளது. இலங்கையின் உயரமான மலை பீதுருதாலகால ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,524 மீற்றர்கள் (8,281 ft) உயரமானதாகும். கடற் காற்றுக் காரணமாக நாட்டின் காலநிலை வெப்பமான அயனக் காலநிலையாக உள்ளது. நாட்டின் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை மத்திய மலைநாட்டில் 17 °C (62.6 °F)ஆக காணப்படுகின்றது. இங்கு குளிர்காலத்தில் சிலநாட்களுக்கு பனிப்பொழிவு காணப்படுவதுண்டு. ஏனைய தாழ்நிலப் பகுதிகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 33 °C (91.4 °F)ஆக உள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை 28 °C (82.4 °F)இலிருந்து சுமார் 31 °C (87.8 °F) வரை உள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் 14 °C (25.2 °F)இலிருந்து 18 °C (32.4 °F) வரை வேறுபடுகிறது.
விண்வெளி ஓடமொன்றிலிருந்து இலங்கையின் காட்சி
நாட்டின் மழைவீழ்ச்சி இந்து சமுத்திரம் மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து வீசும் பருவக் காற்றுக்களில் தங்கியுள்ளது. ஈர வலயப் பகுதிகளும் மத்திய மலைநாட்டின் சில பகுதிகளும் ஒவ்வொரு மாதமும் 2,500 மில்லிமீற்றர்கள் (98.4 in) மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் குறைந்த மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய உலர் வலயப் பகுதிகள் ஆண்டு தோறும் 1,200 to 1,900 mm (47 to 75 in) வரையான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. வரள் காலநிலையைக் கொண்ட வடமேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகள் மிகவும் குறைந்த மழைவீழ்ச்சியாக ஆண்டுக்கு 800 to 1,200 mm (31 to 47 in) வரையான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. வழமையாக புயல் காற்றுக்கள் வீசுவதோடு அயன மண்டலச் சூறாவளியும் வீசுவதுண்டு. இதனால் நாட்டின் தென் மேற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை பொழிகிறது. பொதுவாக ஈரப்பதன் தென்மேற்கு மற்றும் மலைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதோடு மழைவீழ்ச்சியிலும் தங்கியுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன் நாட்டின் உட்கட்டமைப்பு, பொது விநியோக வழிகள் மற்றும் நகர்ப்புறப் பொருளாதாரம் என்பன பாதிக்கப்படுகின்றன.
நாட்டில் 103 நதிகள் உள்ளன. இவற்றுள் 335 கிலோமீற்றர்கள் (208 mi) நீளமான மகாவலி கங்கையே மிகவும் நீளமானதாகும். இந் நதிகளினால் உருவாக்கப்பட்ட 10 மீற்றருக்கும் அதிகமான நீர்வீழ்ச்சிகள் 51 காணப்படுகின்றன. இவற்றுள் 263 மீற்றர்கள் (863 ft) உயரமான பம்பரகந்த நீர்வீழ்ச்சியே மிகவும் உயரமானதாகும். இலங்கை 1,585 km நீளமான கரையோரத்தைக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி நில எல்லையிலிருந்து 200 கடல் மைல் தூரம் வரை உள்ளது. இது நாட்டின் நிலப்பரப்பின் 6.7 மடங்கு பரப்பளவைக் கொண்டுள்ளது. நாட்டின் கடற்கரையும் நீர்ப்பரப்பும் மிகவும் வளம் பொருந்திய கடற் சூழலைக் கொண்டுள்ளது. இங்கு கடலோரப் பவளப் பாறைகளும் கரையோர மற்றும் கழிமுகப் பகுதிக் கடற் புல் படுகைகளும் காணப்படுகின்றன. இலங்கையில் 45 கழிமுகங்களும் 40 களப்புகளும் காணப்படுகின்றன. 7000 எக்டேயர் பரப்பளவு கொண்ட இலங்கையின் கண்டற் தாவரச் சூழல் தொகுதி 2004 இந்து சமுத்திர சுனாமியின் தாக்கத்தைக் குறைப்பதில் பாரிய பங்களிப்புச் செலுத்தியிருந்தது. இலங்கையில் இல்மனைற்று, பெல்சுபார், காரீயம், சிலிக்கா, கயோலின், மைக்கா மற்றும் தொரியம் போன்ற கனிமப் பொருட்கள் செறிந்துள்ளன. மன்னார் வளைகுடாவில் பெற்றோலியம் மற்றும் இயற்கைவாயு இருப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, அவற்றை பிரித்தெடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

தொடரும்.......

0 comments:

Post a Comment