Saturday 16 January 2016

பிரிவுகளும் பி்த்தலாட்டங்களும்


இன்று எமது ஊரைப்பொருத்தளவில் மக்களிடையே பொருளாதாரத்தால் பிரிவு, தொழில் ரீதியாகப் பிரிவு, அரசியலால் பிரிவு, மார்க்கம் என்ற பெயரால் பிரிவு இவ்வாறு  பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் வெறுத்தும், தும்சித்தும், தங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைக் களைந்து வேற்றுமை காண்கின்றனர். “ஒரு முஸ்லீமைப் பார்த்து தூய மனதுடன் முன்னகைப்பதும் தர்மமே” என்று  இஸ்லாம் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

ஆரம்பத்தில் தனிமனிதன் தனது தேவையை தானே நிறைவேற்ற முடியாதபோது தனிமனிர்கள் சேர்ந்து குடும்பமாகினர். அப்போது அவனது தேவைகள் அதிகரித்தமையால் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து குலங்களைத் தோற்றுவித்தது. அங்கும் அவர்களது குலங்களுக்குள்ளே தேவைகளும், கடமைகளும் விசாலமாகியதால் குலங்கள் பல சேர்ந்து கோத்திரங்களாகின. கோத்திரங்களிடையே மீண்டும் பாரிய தேவைகள் பன்மடங்காகப் பெருகியதாலும் அக்கோத்திரங்கள் எல்லாம் ஒன்றிணைந்து சமூகத்தைத் தோற்றுவித்தது. அச்சமூகத்தில் மக்கள்தொகை அதிகரிப்பாலும், தேவைகள் அதிகரித்தமையாலும், பிரச்சினைகள் உருவெடுத்ததாலும் அதனைத்தீர்த்து வைக்க சமூகம் ஒன்றிணைந்து அரசைத் தோற்றுவித்த வரலாற்றை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

ஆனால், தற்காலத்தில் எமது மக்கள் ஒவ்வொருவரும் கொள்கை முறண்பாடுகாளாலும்,  பெருமித குணங்களினாலும், உயர்வு-தாழ்வு மனப்பாங்கினாலும் சமூகத்தை வெறுத்து, குடும்பங்களை வெறுத்து மனிதன் ஆரம்பத்தில் தோல்விகண்ட தனிமனித கொள்கைக்கே சென்று விடுகிறான். 

தற்போதைய எமது பிரதேசத்தைப் பொருத்தளவில் மார்க்கமென்ற பெயரால் பல குடும்பங்கள் தமது உறவுகளை இழந்து முட்டிமோதித்திரிவதை நாம் காண்கின்றோம். தௌஹீத், தப்லீக் என்ற பிரிவுகள் நமக்குள் கிடையாது. தௌஹீத் என்றால் ஓரிரைக்கொள்கை அதேபோல் தப்லீக் என்றால் ஓரிரைக்கொள்கையை பிரச்சாரம் செய்வோர் நாம் அனைவரும் “அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் தினரே” என்பதையும் வழிகெட்ட கூட்டமல்ல என்பதையும் ஒவ்வொருவரும் புறிந்துவைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அகீதா எனும் இஸ்லாமியக் கொள்கையிலோ, பர்ளுகளிலோ வேறுபட்டவர்கள் அல்ல அப்படியிருந்தும் ஏன் நமக்குள் இத்தனை பிரிவினை??? வெறுப்பு??? விதண்டாவாதம்??? பொறாமைகள்??? பெருமிதம்???
தௌஹீத் கூறும் தப்லீக்கும், - தப்லீக் கூறும் தௌஹீதுமல்ல உண்மையான வழிகெட்ட கூட்டம். 

பொய் நபித்துவத்தை வாதிட்ட முஸைலமா, சஜா, அஸ்வதுல் அன்ஸி போன்றோரின் தோற்றத்தினாலும் அவர்களை பின்பற்றிய சிலராலும் உருவாக்கப்பட்டதும். பகுத்தறிவினை இஸ்லாமிய அகீதாவுக்குள் நுழைத்ததினால் உருவாக்கப்பட்டதும், சில சஹாபாக்கள்மீது கொண்ட அளவற்ற அன்பால் உருவாக்கப்பட்டதும், இஸ்லாமியரை பிரித்துவிடவேண்டுமென் யஹுதிகளின் திட்டங்களினால் உருவாக்கப்பட்டதுமே இந்தக் வழிகெட்ட கூட்டங்கள். 

01. (முஸைலமாக்கள்) தற்போதைய காதியானிகள்
02. ஹவாரிஜ்
03. முர்ஜிய்யா
04. கத்ரிய்யா
05. ஷீஆ (ராபிழா)
06. முஃதஸிலா
07. ஜஹ்மிய்யா
08. அஷாயிரா (அஷ்அரிய்யா)
09. மாத்ரூதிய்யா
10. கர்ராமிய்யா
11. முஷப்பிஹா
12. முஅத்திலா
13. புகைரிய்யா
14. ளராவிய்யா
15. ஹர்பிய்யா
16. அத்திஜானிய்யா
17. அல்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் உள், மற்றும் வெளி அர்த்தங்கள் உண்டு என வாதிடும் பாதினிய்யா

இவ்வாறு இன்னும் பல கூட்டங்கள் உள்ளன.(இவர்கள் பற்றிய முழுத் தகவலும் தேவையென்றால் s.siyath@gmail.com எனும் எனது E-mailலுக்கு Mail செய்யுங்கள், உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.)

எனவே, தமது சுயஇலாபத்திற்காக தௌஹீதுக்கு எதிராக தப்லீக்கும், தப்லீக்குக்கு எதிராக தௌஹீதும் கூட்டம் சேர்ப்பதை விடுத்து, இஸ்லாத்தில் உண்மையான பிரிவுகளை விளங்கி தௌஹீத் - தப்லீக் இரண்டுமே “அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்” என்ற அல்லாஹ்வையும், சுன்னாவினையும் பின்பற்றுகின்ற ஒரே உண்மையான பிரிவு என்பதனையும் அறிந்து, தமது சுயநலத்திற்காக மார்க்கத்தின் பெயரால் மக்களிடையே குழப்பங்களை உருவாக்கி அதில் குளிர்காய்வதை தவிர்த்து சமூகத்திற்கிடையே ஒற்றுமையினையும், சகோதரத்துவத்தினையும் எத்தி வையுங்கள். அல்லாஹ் உங்களின் வாழ்வில் பரக்கத்தை அள்ளி வழங்குவான்.

- அல்ஹம்துலில்லாஹ் -


0 comments:

Post a Comment