Thursday 14 January 2016

உலக வரலாற்றின் சமகால சகாப்தம்.... பகுதி 4


இஸ்ரேல்–பாலஸ்தீனம் சர்ச்சை


இஸ்ரேல், மேற்குக் கடற்கரை, காசா பகுதி மற்றும் கோலான் ஹைட்ஸ்
இஸ்ரேல்–பாலஸ்தீனம் சர்ச்சை இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் சர்ச்சையாகவே உள்ளது. பரவலான அரபு–இஸ்ரேல் சர்ச்சையில் இதுவும் ஒரு பங்காக உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன சர்ச்சையிலான இரு முக்கியத் தரப்பினரிடையே தற்போது கலந்தாலோசனையில் உள்ள இரு நாட்டுத் தீர்வு என்பதே ஒப்புக்கொள்ளக்கூடியதாக உள்ள தீர்வாக உள்ளது.
இரு நாட்டுத் தீர்வில் பாலஸ்தீனத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேற்குப் பகுதியில் இரண்டு தனித்தனி நாடுகளை அமைப்பதைக் கருதுகிறது. மோதலைத் தீர்ப்பதற்காக அவை இரண்டில் ஒன்று யூதர்களுக்கானதாகவும் (Jewish) மற்றொன்று அரேபியர்களுக்கானதாகவும் (Arab) இருக்கும். இக்கருத்தின்படி, அரேபியா வாழ் மக்களுக்கு புதிய பாலஸ்தீன நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்; இதே போல் பாலஸ்தீன அகதிகளுக்கும் இது போன்ற குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது. இன்றுள்ள இஸ்ரேலியாவிலுள்ள அரேபிய குடிமக்கள் இஸ்ரேலிலேயே தொடர்ந்து இருக்கலாம் அல்லது புதிய பாலஸ்தீனத்தின் குடிமக்களாகப் பதிந்துகொள்ளலாம் என்ற தெரிவு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தற்போது, வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இரு தரப்பினரிடையேயும் இரு நாட்டுத் தீர்வே இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வழியாகும் என்ற கருத்தை ஆதரிப்பவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். பாலஸ்தீனியர்களில் பெரும்பாலானோர் மேற்குக் கடற்கரையையும் காசா பகுதியையும் எதிர்கால நாட்டின் பகுதிகளாகக் கருதுகின்றனர். இதே யோசனையை பல இஸ்ரேலியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். பெரும்பாலான கல்வியாளர்கள் ஒரு நாட்டுத் தீர்வை முன்மொழிகின்றனர். அதன்படி, இஸ்ரேல், காசா பகுதி மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதி ஆகிய அனைத்துமே அனைவருக்கும் சம உரிமையுள்ள இரு தேசிய நாடுகளாக இருக்கும்.
எந்த ஒரு இறுதியான உடன்படிக்கையின் அமைப்பின் ஏற்புத்தன்மையிலும் அடிப்படை வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் ஒவ்வொரு தரப்பினரும் அதன் எதிர்த்தரப்பினரிடையே கொண்டிருக்கும் நம்பகத்தன்மையின் அளவைப் பற்றியும் உடன்பாடற்ற குறிப்பிடத்தக்க பகுதிகளும் உள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன இனத்தவருக்குள் இந்த மோதலினால் பரந்துபட்ட பல்வகையான கருத்துகளும் கணோட்டங்களும் உருவாகியுள்ளன. இதனால் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயுள்ள பிரிவினை மட்டுமின்றி அவர்களின் இனத்துக்குள்ளேயே உள்ள பிரிவினைகளும் தனித்தன்மையுடன் தெரிகின்றன. 2003 ஆம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனிய தரப்பானது இரண்டு பெரிய பிரிவினருக்கிடையேயான மோதலினால் சிதைவடைந்துள்ளது: அவை ஃபத்தா என்னும் பாரம்பரிய ஆதிக்கம் நிறைந்த பிரிவு மற்றும் மிகவும் சமீபத்திய தேர்தல் ரீதியான சவாலாக விளங்கும் ஹமாஸ் என்னும் பிரிவு ஆகியவையாகும்.

ஹமாஸ்

 Ḥamasஅரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பாலஸ்தீன சுணி இஸ்லாமிய போராளி இயக்கமும் பாலஸ்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்
ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு ஷேக் அகமது யாசின், மற்றும் முகமது தாஹா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களைமேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலஸ்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது[2].
இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்[3].
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது. ஜனவரி 2006 இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது.

தொடரும்....

0 comments:

Post a Comment