நாம் கண்டு பிரமிப்படைகின்ற அறிவியல், தொழிநுட்ப முன்னேற்றத்தின் காரணமாக தற்கால உலகை அறிவியல் உலகம் என்று வர்ணிப்பர்! Computer, E-mail, Internet என தகவல் தொழிநுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக மாற்றியுள்ளது. இன்றைய நவீன விஞ்ஞான சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான முன்னேற்றங்களினால் மனிதனின் வாழ்க்கை தரம்குறைந்து, போட்டி பொறாமைகளினால் போர்த்தப்பட்டு நமது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. நாம், நமது கலாச்சாரத்தை, நாகரீகத்தை, பண்பாட்டை இழந்து தவிக்கிறோம்.
கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டும் முறையே ஆகும். நாகரீகமானது ஒருவரது அறிவியல், தொழிநுட்பத்தில் மாற்றங்களை உண்டாக்கவேண்டுமே தவிற அவரது கலாச்சாரத்தைப் பாதித்துவிடக்கூடாது.
ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் சமூகச் சங்கிலிக்குள்ளேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கிறோம்.
ஆனால் இன்று சினிமா, நாடகம், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் வளர்ச்சியும், அதனைத் தவறான முறையில் பயன்படுத்துவதும் எமது கிராமமக்களின் வாழ்வில் பாரியதொரு தீயபுரட்சியை ஏற்படுத்தி ஆடைகளில் மாற்றம், கவர்ச்சியான ஆடைகளின் தோற்றம், ஆண்-பெண் கலப்பு நிலை, தொலைபேசியில் Wrong Number தொடர்புகள் போன்ற கலாச்சார சீர்கேடுகள் தலைதூக்கியிருக்கின்றது. இதனாலேயே அன்மைக்காலத்தில் பல குடும்பங்களிடையே பிரச்சினைகளும், பிரிவுகளும் உண்டாயிருக்கின்றன. அதற்குக் காரணம் ஆண்பெண் தொடர்பு நிலை அதிகரித்தமையே என்பதை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இதனைத் தடுக்க என்ன வழி...........
01. பிள்ளைகளிடம் கைபேசி (Phone) கொடுப்பதையும், பாவனையையும் முற்றாகத் தடைசெய்யவேண்டும்.
02. தீய நண்பர்களின் தொடர்வை துண்டித்துவிடவேண்டும்.
03. பிள்ளைகள் கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் (தொலைக்காட்சியை குறிப்பிட்ட நேரத்திற்காவது மூடிவைக்கவேண்டும்.)
04. அவர்களை அடிக்கடி பரீட்சிக்க வேண்டும்.
05. அவர்களின் நடை, உடை, பாவனையில் மாற்றங்கள் ஏற்படுகின்றபோது அதுபற்றி கூர்மையான அவதானம் கொள்ளவேண்டும்.
06. ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை நம்பவேண்டுமென்பதற்காக அதீத நம்பிக்கை ஆபத்தை ஏற்படுத்தும்.
07. தேவையேற்படுகின்றபோது வீட்டுத்தொலைபேசி அல்லது பெற்றோரின் தொலைபேசியிலேயே பெற்றோர் மூலமாகவே பிள்ளைகள் முக்கியமான தகவல்களைப் பரிமாரிக்கொள்ளவேண்டும்,
08. பெற்றோர்கள், பிள்ளைகளிடம் நட்பாகவும், பண்பாகவும் நடப்பதுடன் தேவையேற்படும்போது கண்டிப்பும் வேண்டும்.
09. அடிக்கடி பாடசாலைக்குச் சென்று தமது பிள்ளையின் நடத்தை, முன்னேற்றம் பற்றி கலந்துரையாடவேண்டும்.
10. பெற்றோர்களின்/பாதுகாவலரின் கண்காணிப்பின்கீழ் பிள்ளைகளை எப்போதும் இருக்கவேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளை ஒவ்வொரு பெற்றோரும் செய்கின்றபோது தமது பிள்ளைகளைப்பற்றிய முழு தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். இதனால் தவறிழைக்கின்ற எண்ணத்திலிருந்து பிள்ளைகள் விடுபடுவர்.
அத்துடன், திருமணம் முடித்த பெண்களின் நிலை இதைவிட சற்றுவித்தியாசமானது. தான் திருமணம் செய்துவிட்டேன்தானே என்று அனைத்திலும் பராமுகமாக இருந்துவிடுவர். ஆனால் அவர்களை உற்றுநோக்குவோர் ஏராளம். இவர்கள்தான் மிகுந்த அவதானத்துடன், தானே தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைக் கைகொள்ளவேண்டும்.
தமது கைபேசிகளை உரியமுறையில் பயன்படுத்திக்கெள்ளவேண்டும். பிற ஆடவர் தொடர்வை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
திருமணம் முடித்த பெண்கள்......
1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது. அதுவும் முக்கியமான விடயம் என்றால் மட்டும்.
2. பெற்றோர், உடன்பிறந்த சகோதரர் கணவனைத் தவிற மற்ற ஆண்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினேன், என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.
3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.
5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்கள் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.
6. பெற்றோர், உடன்பிறந்த சகோதரர்கள் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவர்களின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள்ளு விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.
7. கலாச்சாரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத ஆடைகளையும், அணிகலன்களையும் அணிதல் வேண்டும். ஏனென்றால் தற்போது பல பிரச்சினைகளுக்கு அவர்களின் ஆடைகளே காரணமாக அமைகிறது.
தமக்கு எந்தத் தீய எண்ணமும் இல்லையே என்று ஒவ்வொரு பெண்ணும் நினைத்தாலும் பார்க்கும் நபரின் எண்ணத்தை உங்களால் அறிந்துகொள்ளமுடியாது. எனவே “பாதுகாப்பே முதன்மை” யாக வைத்துக்கொள்ளுங்கள்.
-நன்றி-
0 comments:
Post a Comment