கௌரவ ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய சிறிய விளக்கம். இவர், இலங்கை அரசியல்வாதியும், பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 சனவரி 9 முதல்பிரதமராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அரசியல் கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.
விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார். 2015 ஆகஸ்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிவெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் ரணில் முக்கிய பங்காற்றினார்.
மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக்!
இலங்கைப் பிரதமர்களின் பட்டியல்
1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 14 பேர் பிரதமர்களாகப் பதவியேற்றுள்ளனர். 1978 வரை பிரதமரே அரசுத்தலைவராகவும் இருந்தார். 1978 இல், அபோதைய பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சிமுறையை அறிவித்தார். இதன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டன. சனாதிபதி நாட்டுத் தலைவராகவும், அரசுத் தலைவராகவும் ஆனார். பிரதமர் பதவி சம்பிரதாயபூர்வமான பதவியாக ஆனது.
2015 ஏப்ரல் 28 இல், நாடாளுமன்றம் 19வது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சனாதிபதியின் சில அதிகாரங்கள் பிரதமருக்குக் கொடுக்கப்பட்டன.
1947 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த 14 பிரதமர்களில் ரணில் விக்கிரமசிங்க நான்கு தடவைகளும், டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் மூன்று தடவைகளும், இரத்தினசிறி விக்கிரமநாயக்க இரு தடவைகளும் பிரதமர்களாக இருந்துள்ளனர். ஐந்து பிரதமர்கள் சனாதிபதிகளாகப் பதவியேற்றனர். தற்போதைய பிரதமர்ரணில் விக்கிரமசிங்க 2015 சனவரி 9 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார்.
பிரதமர்களின் பட்டியல்
1947 முதல் இலங்கையின் பிரதமர்களாகப் பதவியில் இருந்தோரின் பட்டியல்:
- கட்சிகள்
ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
இல. | படிமம் | பெயர் தொகுதி | பதவிக்காலம் | அரசியல் கட்சி (கூட்டணி) | ||
---|---|---|---|---|---|---|
1 | டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (1884–1952) மீரிகம | 24 செப்டம்பர் 1947 | 22 மார்ச் 1952 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
1947 | ||||||
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர். இவரது காலத்தில் இலங்கை பெரிய பிரித்தானியாவிடம்இருந்து விடுதலை பெற்றது. | ||||||
2 | டட்லி சேனாநாயக்க டெடிகமை | 26 மார்ச் 1952 | 12 அக்டோபர் 1953 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
1952 | ||||||
டி. எஸ். சேனநாயக்கா இறந்ததை அடுத்து மகன் டட்லி சேனநாயக்கா பதவியேற்றார். இவரது கட்சி 1952 சூன் தேர்தலில் வெற்றி பெற்றது. 1953 இல் தனது பிரதமர் பதவியைத் துறந்தார். | ||||||
3 | சேர் ஜோன் கொத்தலாவலை தொடங்கஸ்லந்தை | 12 அக்டோபர் 1953 | 12 ஏப்ரல் 1956 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
— | ||||||
கொத்தலாவலையின் பதவிக்காலத்தில் இலங்கை ஐநாவில் இணைந்தது. | ||||||
4 | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அத்தனகலை | 12 ஏப்ரல் 1956 | 26 செப்டம்பர் 1959 | இலங்கை சுதந்திரக் கட்சி | ||
1956 | ||||||
பண்டாரநாயக்கா நாட்டின் அதிகாரபூர்வ மொழியை ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கு மாற்றினார். இவரது பதவிக்காலம் முடியும் முன்னரே இவர் படுகொலை செய்யப்பட்டார். | ||||||
5 | விஜயானந்த தகநாயக்கா காலி | 26 செப்டம்பர் 1959 | 20 மார்ச் 1960 | இலங்கை சுதந்திரக் கட்சி | ||
— | ||||||
பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டடதை அடுத்து தகநாயக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவுகளை அடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். | ||||||
6(2) | டட்லி சேனாநாயக்க டெடிகமை | 21 மார்ச் 1960 | 21 சூலை 1960 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
மார்ச் 1960 | ||||||
ஒரு மாதத்தில் சேனநாயக்கா அரசு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. | ||||||
7 | சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916–2000) | 21 சூலை 1960 | 25 மார்ச் 1965 | இலங்கை சுதந்திரக் கட்சி | ||
சூலை 1960 | ||||||
சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் பிரதமராக நியமிக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. 1960 ஆகத்து 2 இல் செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். | ||||||
8(3) | டட்லி சேனாநாயக்க டெடிகமை | 25 மார்ச் 1965 | 29 மே 1970 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
1965 | ||||||
ஐதேக அறுதிப் பெரும்பான்மை பெறாததால் மேலும் ஆறு கட்சிகளுடன் இணைந்து அரசை அமைத்தது. சேனநாயக்கா மூன்றாவது தடவையாக பிரதமரானார். | ||||||
9(2) | சிறிமாவோ பண்டாரநாயக்கா அத்தனகலை | 29 மே 1970 | 22 மே 1972 | இலங்கை சுதந்திரக் கட்சி | ||
22 மே 1972 | 23 சூலை 1977 | |||||
1970 | ||||||
சிறிமாவோ பண்டாரநாயக்கா டொமினியன் இலங்கையை குடியரசாக அறிவித்தார். சிலோன் என்றிருந்த நாட்டின் பெயரை சிறீலங்கா என மாற்றினார். பல தனியார் நிறுவனங்களை அரசுடைமை ஆக்கினார். இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. | ||||||
10 | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (1906–1996) கொழும்பு மேற்கு | 23 July 1977 | 4 February 1978 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
1977 | ||||||
1978 இல் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை அறிவித்து சனாதிபதியானார். | ||||||
11 | ரணசிங்க பிரேமதாசா (1924–1993) கொழும்பு மத்தி | 6 பெப்ரவரி 1978 | 2 சனவரி 1989 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
— | ||||||
1978 அரமைப்புத் திருத்தத்தை அடுத்து பெருமளவு குறைக்கப்பட்ட அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது பிரதமர். | ||||||
12 | டிங்கிரி பண்டா விஜயதுங்கா கண்டி | 6 மார்ச் 1989 | 7 மே 1993 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
1989 | ||||||
13 | ரணில் விக்கிரமசிங்க கம்பகா | 7 மே 1993 | 19 ஆகத்து 1994 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
— | ||||||
சனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை அடுத்து விஜேதுங்க புதிய சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார். | ||||||
14 | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கம்பகா | 19 ஆகத்து 1994 | 12 நவம்பர் 1994 | இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி) | ||
1994 | ||||||
சிறிது காலத்திற்கு பிரதமராக இருந்து பின்னர் 1994 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சனாதிபதி ஆனார்.[17] | ||||||
15(3) | சிறிமாவோ பண்டாரநாயக்கா தேசியப் பட்டியல் | 14 நவம்பர் 1994 | 9 ஆகத்து 2000 | இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி) | ||
— | ||||||
சந்திரிக்கா சனாதிபதி ஆனதை அடுத்து அவரது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக அறிவிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் இவர் பதவி விலகினார். | ||||||
16 | இரத்தினசிறி விக்கிரமநாயக்க களுத்துறை | 10 ஆகத்து 2000 | 7 டிசம்பர் 2001 | இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி) | ||
2000 | ||||||
சிறிமாவோ பதவி விலகியதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக நியமிக்கப்பட்டார்.[2] | ||||||
17(2) | ரணில் விக்கிரமசிங்க கொழும்பு | 9 டிசம்பர் 2001 | 6 ஏப்ரல் 2004 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
2001 | ||||||
சனாதிபதி குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் கலைத்ததை அடுத்து ரணிலின் பதவிக்காலம் முடிவடைந்தது. 2004 இல் புதிய பொதுத் தேர்தல் இடம்பெற்றது. | ||||||
18 | மகிந்த ராசபக்ச அம்பாந்தோட்டை | 6 ஏப்ரல் 2004 | 19 நவம்பர் 2005 | இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) | ||
2004 | ||||||
2005 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்ச வெற்றி பெற்று சனாதிபதி அனார். | ||||||
19(2) | இரத்தினசிறி விக்கிரமநாயக்க தேசியப் பட்டியல் | 19 நவம்பர் 2005 | 21 ஏப்ரல் 2010 | இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) | ||
— | ||||||
ராசபக்ச சனாதிபதி ஆனதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக அறிவிக்கப்பட்டார். | ||||||
20 | திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன தேசியப் பட்டியல் | 21 ஏப்ரல் 2010 | 9 சனவரி 2015 | இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) | ||
2010 | ||||||
21(3) | ரணில் விக்கிரமசிங்க கொழும்பு | 9 சனவரி 2015 | 21 ஆகத்து 2015 | ஐக்கிய தேசியக் கட்சி | ||
2015 | ||||||
2015 சனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து நல்லாட்சிக்கான 100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லாத ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார். | ||||||
22(4) | ரணில் விக்கிரமசிங்க கொழும்பு | 21 ஆகத்து 2015 | இன்று | ஐக்கிய தேசியக் கட்சி | ||
2015 | ||||||
2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்க 7 இடங்கள் தேவையாக இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது. ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார். |
0 comments:
Post a Comment