Friday, 29 January 2016

2013 பெப்ரவரி 3 ஆம் திகதி “லங்காதீப” பத்திரிகையில்.....



கடந்த 2013 பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் “சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு” எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. 
தற்போது இலங்கையில் பொதுபல சேனா மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்கள் இனவாத மதவாத அமைப்புகள் முஸ்லிம்களின் இந்நீண்ட வரலாறுகளை பகிரங்கமாகவே மறுத்துவருவதுடன் மார்க்க கிரிகைகளையும் கலாசார விழுமியங்களையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். இந்நிலையில் மனிதத்தன்மையுடனும் நடுநிலை தன்மையுடனும் நடந்து கொள்ளும் நல்லுள்ளம் படைத்த பௌத்த மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காலத்தின் நிலவரங்களை கவனத்தில் கொண்டு மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாற்று உண்மைகளை வெளிகொண்டுவரும் நோக்கில் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் இக்கட்டுரையை எழுதியுள்ளார். அவர்களுக்கு எமது நன்றிகள்.
சகோதரத்துவம் எனும் உறவு சிங்கள முஸ்லிம்களுக்கிடையில் மிகவும் பிணைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது.
முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்கையில் பழங்காலங்தொட்டே இலங்கையுடனும் இலங்கையின் ஆட்சியாளர்களுடனும் உறவுகளை பேணி நடந்தமைக்கான சாட்சி வரலாற்றில் காணப்படுகிறது. அந்த உறவு பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் என இருவகைப் படுகிறது. 7-8 நூற்றாண்டு ஆளுகையில் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் வர்த்தகத்தை மையமாக வைத்து இந்நாட்டுடன் மிக பலமான உறவை கட்டியெழுப்பியிருந்தனர். அதுமட்டுமின்றி அராபியர்கள் இலங்கை பற்றி எழுதிய நூற்களை பார்க்கையில் அவர்கள் இலங்கை சம்பந்தமாக மிகவும் கவனம் செலுத்தியுள்ளதாக சாட்சி காணப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கம் (இலங்கை) வருவதற்கு முன் நீண்ட காலம் தொட்டே அரபியர்கள் எனும் முஸ்லிம் இனத்தவர்கள் இலங்கைப் பற்றி அறிந்திருந்தனர். கிரேக்கர்களும் ரோமர்களும் இந்நாட்டின் விடயங்களை அராபி பயணிகள் மூலமே அறிந்து கொண்டனர். அப்படியிருந்தும் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் மூலம் எழுதப்பட்ட நூற்களில் இலங்கை பற்றிய செய்திகள் இஸ்லாம் தோன்றிய பின்பே எழுதப்பட்டுள்ளது. முதலில் சுலைமான் என்பவர் மூலமே இந்நாடு பற்றி எழுதப்பட்டது. கி.பி 950-ம் ஆண்டு ஸில்ஸிலா அல்கவாரி எனும் நூலில் இலங்கைப்பற்றிய செய்திகள் உள்ளடக்கபட்டது. அதன் பின் இலங்கைப்பற்றி மிக முக்கிய வர்ணனைகள் வழங்கியவர் இப்னு பதூதா என்ற எழுத்தாளர் ஆவார். இவ்வெல்லா விடயங்களையும் உள்ளடக்கி 10ம் நூற்றாண்டில் மஸ்கினர் எனும் எழுத்தாளர் இன்னுமொரு நூலை எழுதினார் அதன் பின் மக்தஸி எனும் எழுத்தாளரும் இலங்கைப்பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலத்தில் அபுல்தீதா போன்ற புவியிலாளர்கள் கூட இலங்கைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மிகவும் முக்கியமானவர் 15ம் நூற்றாண்டில் இந்நாட்டில் பயணித்தவரான இப்னு பதூதாவுடைய செய்தியாகும் குறிப்பாக 7ம் நூற்றாண்டு ஆகையில் மேற்கு திசை கடற்மார்கங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். தென் இந்தியாவில் சோழ பாண்டிய ஆட்சி விழுந்ததுடன் அராபிய ஆட்சி வளம் பெற்றது.
அதன்பலனாக கி:பி: 949ம் ஆண்டு ஆகையில் அராபிய கப்பல் வர்த்தக நிமித்தம் இலங்கைக்கு வந்தனர். 8ம் நூற்றண்டிலிருந்து பெறுமளவில் முஸ்லிம்கள் இலங்கையில் வளர்சிசியடைந்தனர். இலங்கையில் இருந்த இம்முஸ்லிமகள் இலங்கை முஸ்லிம்கள் என்றும் கடலோரப்பகுதி முஸ்லிம்கள் என்றும் அறியப்பட்டனர்.
அராபிய ஆட்சி தென் இந்தியாவில் வளர்ந்ததன் பின் முஸ்லிம்கள் வர்த்தகம் நிமித்தம் இலங்கைக்கு வந்தனர். அராபிய வர்த்தகர்கள் கொழும்பில் தங்கினர். 1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அரபியர்கள் இலங்கையின் கடலோரப்பகுதிகளில் முழு உரிமையை பெற்றிருந்த அதேவேளை சிங்கள மன்னர்கள் மற்றும் சிங்கள மக்கள் ஆகியோருடன் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இலங்கையை ஸரன்தீப் என அழைத்தனர்.
இக்காலபப்பகுதியில் அராபிக் கடலின் கிழக்குப் பகுதியில் பிரதான வர்த்தக சந்தையாக “கொள்ளம்” எனும் இடம் விளங்கியது. இந்த இடத்திலிருந்து இரு பாதைகள் விரிந்து இருந்தன என 9-10 ம் நூற்றாண்டுகளில் அராபிய கப்பலோட்டிகள் எழுதிய குறிப்புகளில் உள்ளன. இவ்விரு பாதைகளில் ஒரு பாதை மன்னார் விரிகூடாவிலிருந்து கங்கை நதி கலக்கும் இடம் வரையாகும். மற்றப்பாதை நிகோபார் தீவினூடாக விரிந்து இருந்தது. வடக்கு பாதை பயணத்தில் முக்கிய இடமாக வடக்கின் எல்லையே காணப்பட்டது.
அதுமட்டுமன்றி இலங்கை மண்ணில் பிறந்த அனைத்து தமிழர்கள் குறித்தும் முஸ்லிம் இனத்தவர்கள் கவனம் செலுத்தினர். அவர்கள் வாசனை பொருட்கள் உற்பத்தியினை வெளி நாடுகளுக்கு கொண்டு சென்றனர். முஸ்லிம் வர்த்தக சமூகம் இலங்கையில் உருவானது இவ்வாறு தான்.
இச்சமூகத்தின் விதவைகள் மற்றும் அனாதை பிள்ளைகளை தஙகளது தாய் நாட்டுக்கு அனுப்புவதற்காக இலங்கை மன்னர் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைப் பற்றி 8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்பு குறிப்பிடுகின்றது. இதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் வர்த்தக சமூகத்தை எந்தளவு பாதுகாத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. ஆராபிய முஸ்லிம்கள் இலங்கையில் மாணிக்ககல் சம்பந்தமாக எப்போதும் முக்கிய கவனம்செலுத்தினர். அன்று இலங்கை “மாணிக்ககல் தீவு” என்றே அறிமுகப் படுத்தப்பட்டது. அப்பெயருக்கு சமமான பெயராகவே “ஜஸீரதுல் யாகூத்” என முஸ்லிம்கள் அறிமுகப்படுத்ததினர். அவர்கள் முத்து வைரம் மாணிக்கம் சங்கு மிளகு சாம்புரானி போன்ற பெறுமதியுள்ள பொருட்களை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த முஸ்லிம்கள் இலங்கையில் பலாத்காரமாகவோ அல்லது ஆயுத பலத்துடனோ வாழ்ந்நதவர்கள் அல்லர். இந்நாட்டு மன்னர்களின் அனுசரனையுடனும் தனிப்பட்ட வியாபாரத்தின் பிரதிபலன்காரனமாகவுமே வாழ்ந்தனர்.
இவ்வாறாக கடலோரப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றுவதற்கு சிங்கள மன்னர்கள் மதரீதியான சினேக உறவை கண்ணியப்படுத்தி இடம் கொடுத்தனர் என்றும் மதரீதியான சினேக உறவு சிங்கள ஆட்சியாளர்களிடம் தெளிவாக காணப்பட்டது என்றும் அராபிய வரலாற்றாசிரியர்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் இலங்கையில் மேற்கு கடலோரப்பகுதிகளில் பொருத்தமான இடங்களில் குறிப்பாக கழிமுகத்திற்கு அண்மையில் சிங்கள மக்களினதும் ஆட்சியாளர்களினதும் பாதுகாப்பு மற்றும் அன்பை பெற்று வாழ்ந்தனர்.
கடலோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஸ்ரீபாத மலைக்கு பக்கத்திலுள்ள பகுதிகளில் மாணிக்க கல் உள்ள இடம் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வாறான காரியம் இலங்கை மன்னர்களின் சம்பிரதாய அனுமதியுடனும் நாட்டு மக்கள் அவர்களுக்கு கொடுத்த உதவி ஒத்தாசைகள் மூலமே நடந்தவையாகும். அக்கால மக்கள் மார்க்கரீதியாக சமூக ரீதியாக எப்பேதமுமின்றி முஸ்லிம்களை வரவேற்றுள்ளனர் என்று இந்த வரலாறு மூலம் தெளிவாகின்றது.
(மத்தியக் கிழக்கில்) முஸ்லிம் ஆட்சி பலம் யாபகூவ இராசதானியத்தின் போது மேலும் வியாபித்து பலமடைந்திருந்தது. யாபகூவ ஆட்சியாளரான முதலாம் புவனேகபாகு மன்னர் முஸ்லிம் நாடான எகிப்துடன் 1283ம் ஆண்டு வர்த்தக உடன் படிக்கையொன்றை செய்து கொண்டார். அன்று எகிப்து மக்களுக்கு இலங்கை வர்த்தக குழுவொன்று சிங்கள மன்னரின் தூதுவொன்றை எடுத்துச் சென்றது. அத்தூதில்
“இலங்கை என்றால் எகிப்து. எகிப்து என்றால் இலங்கை. என் தூதர்கள் திரும்பி வரும்போது எகிப்தின் தூதுவர் ஒருவர் அவர்களுடன் வருவார். என்னிடம் அனைத்து வகையான முத்து மாணிக்கங்கள் பெருமளவில் உள்ளன. கப்பல்கள் யானைகள் துணிமணிகள் கருவா போன்ற அனைத்து வர்த்தக பண்டங்களையும் உங்களுக்கு அனுப்புவேன். (தோமர் என்று சிங்களத்தில் கூறப்படும்) பலகையினால் செய்யப்படும் ஆயுதத்திற்கு பொருத்தமான பலகையின் மரம் என் தேசத்தில் வளர்கிறது. வருடாந்தம் 20 கப்பல்களை அனுப்புமாறு சுல்தான் மன்னர் என்னிடம் கூறுவாரானால் அவைகளை வழங்குவதற்கு என்னால் முடியும். மன்னரின் ஆட்சியின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு எனது இராஜியத்தில் வர்த்தகம் புரிவதற்கு பூரண சுதந்திரம் உண்டு. எனக்கு சொந்தமான 29 மாளிகைகள் உண்டு அதிலுள்ள களங்சியசாலைகள் அனைத்து வகையான மாணிக்கங்களால் நிரம்பியுள்ளன. சிப்பிகள் உள்ளன. அதிலிருந்து பெறப்படும் முத்துக்கள் எனக்கு சொன்தமானவை”
என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தன் மூலம் எமது நாடு முஸ்லிம் நாடுகளுடன் நட்புறவை ஏற்பட்டிருந்தது என்பது தெளிவாக காட்டுகிறது. இது அதற்கான ஒரு உதாரணம் மட்டுமே.

மும்மொழிகளில் எழுதப்பட்ட ஆவனமொன்று காலியில் கண்டெடுக்கப்பட்டது. அது சீன தமிழ் மற்றும் பார்சி மொழியில் எழுதப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இப்னு பதூதா இலங்கையின் ஸ்ரீபாத யாத்திரிகைக்கு வந்தபோது இலங்கை ஆட்சியாளரின் இராசதானிய நகரமான “கோனகர்” நகரத்தினுடாக போகையில் அவருக்கு கூடுதல் உதவி ஒத்தாசைகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வாறாக அக்காலத்தில் முஸ்லிம்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் அதிகளவிலான உறவு ஏற்பட்டு இருந்தது.

மேலும் புவனேபாகு மற்றும் போர்த்தகேயருடனான போரின் போது சீதாவக்கை இராசதானியத்தின் மன்னரான மாயாதுன்னைக்கு முழுமையான ஓத்துழைப்பினை வழங்கியவர்கள் “செடோரின்” எனும் வர்த்தக குழுவாகும். செடோரின் என்பது முஸ்லிம்களாவர். இந்த வர்த்தக குலம் சீதாவக்கை இராசதானியத்துடன் வர்த்தக மற்றும் நட்புறவுவை பேணிவந்தது.
ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து இந்நாட்டைமீட்கும் சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம் தலைவரான T.B ஜயா அவர்கள் பாரிய பங்களிப்பினை வழங்கினார்கள். அன்று இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் என்று பேதம் இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பாரிய பங்களிப்பை செலுத்திய T.B. ஜயா அவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக கொழும்பு நகரத்தின் வீதியொன்றுக்கு அன்னாரின் பெயர் சூட்டப்பட்டது. அன்று இந்நாட்டு சிங்கள தலைவர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றினார் T.B. ஜயா அவர்கள்.
சாந்தி சமாதானத்தை பரவச் செய்து
குலவாத பேதத்தை நீக்கச் செய்து
சம உபகாரத்தை மேம்படச் செய்து
நாம் வளர்வோம் உயர்வோம் ஒன்று பட்டு.

அன்று சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் ஒரே உணர்வுடன் சகோதரத்துடன் இணைந்து பணியாற்றினார்கள். அந்த உறவின் ஆரம்பத்தை தேடும் பயணத்தில் வரலாற்றின் மூலம் வெளிப்படும் உண்மை இது.
மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி

பொதுபலசேனா அமைப்பின் ஆரம்ப “வித்து” எது?


இக்கேள்விக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை தமது அறிவுக்கெட்டியவகையில் பல்வேறு ஊடகங்களினூடாக தினமும் கூறுவதை நாம் அன்றாடம் அவதானிக்கின்றோம். உண்மையில் இலங்கையில் நடப்பது என்ன? பொதுபலசேனாவின் ஆரம்ப வித்து எது? என்ற வினாவுக்கான விடையினைத் தெளிவாக அறிந்துகொள்வதற்காக நாம் தற்காலத்துடன் கடந்த காலத்தையும் இணைக்கவேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைகளின் உருவாக்கத்தின் ஆரம்பமும் அதன் தெளிவும் கிடைக்கும்.

கல்வியும். பொருளாதாரமும் ஒரு நாட்டின் முதுகெலும்பு எனலாம். ஒரு நாடு அபிவிருத்தி அடைவதற்கு இவையும் முக்கிய காரணிகளாக அமைகிறது. பல்லின மக்கள் வாழ்கின்ற எமது இலங்கையைப் பொருத்தளவில் பொருளாதார ரீதியாக முஸ்லீம்களே வளர்ந்து வருவதை அனைவரும் அறிவர்.

பொருளாதாரத்தில் முஸ்லீம்கள் ஓங்கி நிற்பதை சகித்துக்கொள்ளமுடியாத துவேச பேரினவாதிகளால் இலங்கை வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915ல் சிங்கள முஸ்லிம் கலவத்தைக் கூறலாம். இக் கலவரம் 1915 மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தாலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதால் பாதிப்புக்கள் முஸ்லீம்களுக்கே அதிகமாக இருந்தது.

1915 மே 29  இல் கண்டியில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர். இக் கலவரத்தில் அன்றைய இலங்கைத் தமிழ் தலைவாரக இருந்த பொன் இராமநாதன், துவேச சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டமையும், அன்றைய ஆங்கிலேய அரசினால் கைதுசெய்யப்பட்ட  டீ. எஸ் சேனானாயக்கா, எப். ஆர் டயஸ் பண்டாரநாயக்காடீ. எஸ் விஜேவர்தனாடொக்டர் நெயிசர் பெரேராஈ. டீ. த சில்வாஎச் அமரசூரியஏ. எச். மொலமூறே பல சிங்களத் தலைவர்களை இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்களை மீட்டுவந்தமையையும், அவர் நாடு திரும்பியதும் வண்டியில் பொன் இராமநாதனை வைத்து சிங்கள சகோதரர்கள் தாமாகேவே வண்டியை இழுத்து வீடுவரை கொண்டு சேர்த்தமையையும் நாம் அறிந்தவையே. ஆனால் கடந்த 30வருட ஆயுதப்போராட்டத்திற்கு வித்திட்ட 1983 ஜுலை 23ல் ஏற்பட்ட தமிழ் சிங்கள கலவரத்தையும் எந்தத் தமிழரும் மறந்திருக்கமாட்டர்கள்.


மேலே கூறிய கடந்தகால வரலாற்றை ஒவ்வொருவரும் கூர்ந்து அவதானிக்க வேண்டும். அன்றைய இனக்கலவரத்தின் ஆரம்பமே பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமையும், முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டமையுமே என்பது புலனாகும். அன்றைய கலவரத்தின் ஆரம்ப நிலையும், இக்கால பொதுபலசேனாவின் செயற்பாடுகளும் ஒருமித்ததே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். 

2011 மே 05ஆம் திகதி விமலஜோதியின் தலைமையில் புத்த கலாச்சார மையத்தை மஹிந்த ராஜபக்ஷவே திறந்து வைத்தார் உண்மையில் பொதுபலசேனாவின் ஆரம்ப வித்து இதிலிருந்துதான் தூவப்பட்டது என்பதை யாரும் மறந்துவிடலாகாது. 2013, 2014 காலப்பகுதியில் பொதுபலசேனாவின் தலைமையகமும் இந்த புத்தகலாச்சார மையத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்ராவில்தான் இயங்கிவந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதுமட்டுமல்ல 2013 மார்ச் 9 அன்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், பொது பல சேனாவின் கலாச்சாரம் மற்றும் பயிற்சி மையமான "மெத் சேவனா" பிலனாவில் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

பொதுபலசேனா எனும் இவ்வமைப்பினை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான நகர்வுகளுக்காகவும், முஸ்லீம்களின் வர்த்தகத்தை முடக்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுத்து தமது அடிமைகளாக அடிபணிய வைப்பதற்காகவும் மக்களிடையே அணையா நெருப்பாக என்றுமே எரிந்துகொண்டிருக்கக்கூடிய இனவாத உணர்வை ஓங்கச் செய்வதே துவேச அரசியல்வாதிகளின் நச்சு எண்ணங்களாகும். அதனால்தான் நோ லிமிட் போன்ற இலங்கை முஸ்லீம்களின் வர்த்தக மையங்களின் மீதான அடாவடித்தனங்களும், பள்ளிகள் உடைப்பு, நோன்புகால கிரீஸ் மனித தோற்றம், ஹபாயாவுக்கான எதிர்ப்பு, ஜும்மாவுக்கான எதிர்ப்புக்கள், ஹலால் உணவுப் பிரச்சினை........ இவ்வாறு முஸ்லீம்களுக்கான பொதுபலசேனாவின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சினை என்பதால் உலக நாடுகள் வழமையைப்போல் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொள்கின்றன.

ஆனால் இன்று எமது சிங்கள சகோதரர்களில் பெரும்பாண்மையினர் இனத்துவேசத்தையும், இனக்கலவரத்தையும் விரும்பாமையாலும், அனைத்து இனங்களுடனும் நல்லுறவைப் பேணவேண்டுமென்ற தூய எண்ணங்களுடனும் சுமூகமான வாழ்வை நோக்கிப் பயணிக்கின்னர். இதற்கு தக்க ஆதாரமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு பாரியதொரி தோல்வியினைக் கண்டதைக் குறிப்பிடலாம்.

எனவே, சில அரசியல்வாதிகள் பொதுபலசேனா எனும் இனத் துவேசக்கட்சியினை உருவாக்கி இனப்பிரச்சினையைத் தூண்டிவிட்டு அதனைப் பின்னணியாக வைத்து அரசியல் செய்வதற்கு முனைகின்றனர் என்பதையும், அதற்கு மாற்றுமத சகோதரர்களில் ஒர் சிலரைத்தவிர ஏனையோர் இனத்துவேசத்தை விரும்பவில்லை எனவும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். 



மேலதிக தகவல்களுக்காக

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்

இங்கே கிளிக்



  1. நன்றி

Saturday, 23 January 2016

ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகிறதாம்......

அரசியல் கட்சியினைப்பற்றி குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சிந்திக்கும் சிலர் அரசியல் அனுபவங்களையும் ஒரு கிணற்றுத்தவளைபோலவே காண்கின்றனர். சிறந்த தொண்டர்களாக இருக்கும் இவர்களின் சிந்தனைகள் குறித்தவொரு வட்டத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் சுழல்கின்றன. 

ஒவ்வொரு பிரதேசவாதியும் தமது பிரதேசங்களை மட்டுமே சிந்திக்கின்றனர், ஆனால், அரசியல் கட்சியின் தலைமை எப்போதும் நாடுதழுவிய ரீதியிலேயே மக்களைப்பற்றி் சிந்திக்கும். அத்தோடு தமது கட்சியின் எதிர்காலத்தினையும், அதன் வளர்ச்சியினையும் கருத்திற்கொண்டே செயற்படும். கட்சியின் வீழ்ச்சிக்கு எவ்வகையிலும் துணைபோகாதவாறு வழிநடாத்துவதே தலைமைக்குள்ள திறமையும், அறிவாற்றலும் சிந்தனா சத்தியுமாகும். இவற்றை மக்கள் புறிந்துகொள்வதில்தான் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் நடுநிலையாக சிந்திக்கவேண்டும். அப்படி நடுநிலையாக நிந்திக்கின்றவர்களை ஏனைய கட்சித் தொண்டர்களும், குண்டர்களும் பிரதேசவாதக் கருத்துக்களையும் போலி வாதங்களையும் முன்வைத்து அவர்களை திசைதிருப்ப முனைகின்றனர். இந்தநேரத்தில்தான் கட்சிபற்றி பொதுவாக சிந்திக்கவேண்டும். தமது கட்சி எதற்காக இவ்வாறு செய்தது என்று விரிவான சிந்தனையை நமக்குள்ளேயே உருவாக்கி ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும். தமது வேகத்துடன் விவேகமும் இருக்கவேண்டும். அதுதான் ஒரு சிறந்த தொண்டனுக்குரிய சிறப்பம்சம்.

“ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை”போல் சிலரின் செயற்பாடுகள் அமைந்திருக்கிறது. அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களின் சுயமான சிந்தனையைக் கூட தடுத்து வேறுவகையில் திசைமாற்ற எத்தனிக்கின்ற மாற்றுக்கட்சி நரிக்கூட்டங்களின் தந்திரங்களை அறிந்துகொள்ளவேண்டும். தேசியப்பட்டியலால் பாதிக்கப்பட்ட எமதூர் மக்களுக்கு மனதிலே கவலை இருக்கத்தான் செய்யும் ஆனால் அத்தேசியப்பட்டியல் எதற்காக கிண்ணியாவுக்குச் சென்றது என்பதை நாம் அலசி ஆராய்ந்து சிந்திப்பது ஒவ்வொரு தொண்டருக்கும் கடமை எனலாம்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை எனும் மூன்று மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் அம்பாறை மாவட்டத்தில் திரு.மன்சூர், திரு.பைசல் காசிம், திரு.ஹரீஸ்  போன்றோரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் திரு. அலிசாஹிர் மௌலானா அவர்களும் இருக்கின்றனர். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எவருமில்ல! இந்நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்சிரஸ் என்ற கட்சிக்கே இடமில்லாமல் ஒரு மாவட்டத்தையே இழக்க நேரிடலாம். அங்கிருக்கின்ற மக்களும் அல்லல்பட்டு தமது உரிமைகளை இழக்க நேரிடலாம். இவற்றைப் பயன்படுத்தி ஏனைய கட்சிகள் உள்நுழைந்துகொள்ளும். என்ற அச்சம் நிலவியது. இக்கால கட்டத்திலேதான் அதிகமாக முஸ்லீம்களைச் சுமந்திருக்கின்ற கிண்ணியாவிலே சுமார் 27000வாக்குகளைப் பெற்ற திரு.M.S.தௌபீக் அவர்களை கட்சி முடிவெடித்தது. இம்முடிவானது முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சியையும், வீழ்ச்சியடையாத தன்மையினையும் கருத்திற்கொண்டே எடுக்கப்பட்டது எனலாம்.

சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு தொண்டரும் சுயமாகச் சிந்திக்கவேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். உங்களது சிந்தனைகள் பரந்துபட்டதாக இருக்கவேண்டும். பிரதேசவாதங்களைவிட தனி ஒரு மாவட்டம் அநாதையாவதைப்பற்றி தீவிரமாகவும், நடுநிலையாகவும் யோசிக்கவேண்டும். அறிவாற்றலும் அனுபவமும் நிறைந்த எமது முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ தலைவர் நடுநிலையாக நிந்தித்திருக்கின்றார். அதேபோல் இரண்டு அமைச்சுக்களை எமது அம்பாறை மாவட்டத்திற்கே கொடுத்திருக்கின்றார். அத்துடன் மாகாண சுகாதார அமைச்சை எமது பிரதேசத்திற்குள்ளேயே வடிவமைத்திருக்கின்றார். இதுபோலவே, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சைப் பரிசளித்திருக்கின்றார். இப்படி ஒவ்வொன்றையும் மக்களுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் செதுக்கிய சிந்தனை சிற்பியின் வியுகத்தை அனைவரும் தெரிந்து தெளிந்துகொள்ளவேண்டும்.

ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களில் சிலர் எதற்காகப் பிரிந்து சென்றார்கள் என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால் அவரவரின் தனிப்பட்ட சுயஇலாபத்திற்காகவும், தலைமைத்துவப்போட்டி காரணமாகவுமே கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிகளை அமைத்துக்கொண்டனர் என்பதனை தெளிவாக அறிந்துகொள்வதே எமது தெளிந்த சிந்தனைக்கு உரம்போன்றது.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும், மாற்றுக்கட்சிக் குள்ளநரிகூட்டங்கள் பிரதேசவாதத்தைக்கூறி வடிக்கின்ற முதலைக் கண்ணீரின் தந்திரவலைக்குள் விழுந்துவிடாமல் சமூகத்தின் விடியலை நோக்கிப் பயணிக்கும் நமது கட்சியின் முன்னேற்றத்திற்கு விழுதுகளாக பலம்கொடுப்போம்.

-நன்றி-

Friday, 22 January 2016

எச்சரிக்கை!! பாதுகாப்பே முதன்மை!


தற்காலத்தில், மனிதன் இயந்திரம்போல் மாறிவிட்டான். அவனது தேவைகளும் பொறுப்புக்களும் அதிகரித்தமையே இதற்கு காரணம் எனலாம். தமது வேலைப்பழு காரணமாக தூங்குவதற்கு நேரமின்றி, தனது அயலவர்-சொந்தங்களுடன் உறவாடுவதற்கு நேரமின்றி, தமக்குப்பிடித்த உணவுகளை சுத்தமாக சமைத்துச் சாப்பிட நேரமின்றி அல்லலுடன் தமது வாழ்வுச் சக்கரத்தை உருட்டிச் செல்கின்றான். கடைகளிலோ, எப்படிப்பட்டவர் என்று அறியாதவரிடமெல்லாம் உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றான். இதனால் தோல் நோய்முதல் அனைத்து நோய்களும் தேவையற்ற வகையில் அவனுக்கு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றான். சிலவேளைகளில் உயிரை மாய்த்துக்கெள்கின்ற ஆபத்தான நோய்களுக்கும் ஆளாகின்றான்.

“தாயும், தந்தையும் எய்ட்ஸ்நோயற்றவர்கள் ஆனால் எந்தவித கெட்டபழக்கங்களும் இல்லாத பிள்ளைக்கு எயிட்ஸ்!” 

“பாடசாலை மாணவர்களுக்கு எயிட்ஸ்!”

“பெற்றோர்கள் வைத்தியர்கள், பிள்ளைகளுக்கு எயிட்ஸ்”

“வைத்தியருக்கே எயிட்ஸ்”

இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி ஊடகங்களினூடாக அறிந்துகொள்கின்றபோது எமக்குள்ளே அவர்களைப்பற்றி பாலியல் சம்மந்தமான தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்திக்கொள்கின்றோம். எயிட்ஸ் என்பது முறையற்ற பாலியல் தொடர்பினால் வருவது மட்டுமல்ல, முறையற்ற உணவுப்பழக்கத்தி்னாலும் வருகிறது!

அதிலும் குறிப்பாக பேரூந்து, தொடரூந்து (பஸ், ரயில்) மற்றும் ஏனைய பயணங்களின்போது உள்ளேயும், வெளியேயும் வெட்டி விற்கப்படுகின்ற மாங்காய், அன்னாசி போன்ற உணவுப்பொருட்களை நாம் வாங்கிச் சாப்பிடுகின்றோம். அதேபோல் மாணவர்களும் வெளியிலே வெட்டி விற்பனை செய்யப்படுகின்ற உணவுப்பொருட்களை கொள்வனவு செய்து உட்கொள்கின்றனர். விற்பனையாளியின் தன்மை, அவருக்கு எவ்வகையான நோய்கள் உள்ளன என்பதையெல்லாம் பொருட்படுவத்துவதே இல்லை இதனால் பாரிய நோய்களை எம்முடலினுள் நாமே எமக்குத் தெரியாமல் ஏற்றிக்கொள்கின்றோம். 

எப்படியெனில்.........

உதாரணமாக, மாங்காய், அன்னாசி போன்ற உணவுப்பொருட்களை வெட்டி விற்பவருக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அவர் வெட்டும்போது அவருக்குத்தெரிந்தோ - தெரியாமலோ இரத்தக் கசிவு ஏற்பட்டு அந்த இரத்தம், வெட்டப்படும் உணவுப்பொருளிலும் படிந்தால் அதனை உட்கொள்ளும் எமக்கும் அந்த எய்ட்ஸ பரவும் ஆபத்தான நிலை ஏற்படும். இதனால் நாம் எயிட்ஸ் நோயாளியாகின்றோம். இவ்வாறுதான் ஏனைய நோய்களும் பரவுகின்றன. 

பயணங்கள் செல்கின்றபோது உணவுப் பொருட்களை உங்களது வீடுகளிலே சமைத்து எடுத்துச் செல்வதே உங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையது என்பதை அனைவரும் அறிந்(துவைத்)திருத்தல் நல்லது.

பொருத்தமான வகையில் பரிசோதிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்ந்த ஏனைய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்வதனால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். 

இதேபோன்றுதான் தலைமுடி வெட்டுமிடங்கள்போன்ற இரத்தத்தோடு சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மிகுந்த பாதுகாப்புடன் செயற்படுதல்வேண்டும்.

“வெள்ளம் வருமுன்னரே அணை கட்டுவோம்” என்பது போல, நோய்கள் வருமுன்னரே பாதுகாப்பை மேற்கொள்வோம்.




நன்றி

Tuesday, 19 January 2016

அரசியலும் சமூக அவலங்களும்




எமது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னர் ஒரு காலம் இருந்தது..... 
1995ற்கு முன்னர் பிறந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் (அதாவது சுமார் 20 வருடங்களுக்கு முன்னர்.) அன்று போட்டிகளில்லை, பொறாமைகள் இல்லை, குரோத மனப்பான்மை இல்லை, வஞ்சகமில்லை. வரட்டுக் கௌரவமில்லை. மக்களிடையே அன்னியோன்னிமான வாழ்வு இருந்தது, அண்டை வீட்டார்கள் பசித்திருக்க ஏனையோர் புசிக்கமாட்டார்கள்,  ஒருவர் வீட்டில் சமைக்கின்ற “கறி” ஏனைய குடும்பங்களுக்கும் பரிமாறப்படும். குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து சொந்தங்களோடு இணைந்திருக்கும், அன்பில் பாசப்பிணைப்பு இருந்தது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். இவ்வாறு அன்றைய வாழ்வு மனதுக்கு இதமான சந்தோசத்தையும், அமைதியையும் தந்தது. அதனால் அன்றைய மக்கள் தங்களிடையே பதற்றமின்றி(Tension) சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து சந்தோசமாக இருந்தனர். அன்றும் அரசியல் இருந்ததுதான்.............

ஆனால் இன்று  எமது மக்களிடையே பல்வேறுபட்ட சுயநலக்காரணங்களுக்காக தமது உறவுகளைப் பகைத்துக்கொண்டு வாழ்கிறோம். அதிலும் குறிப்பாக அரசியலால் பிரிந்தவர்களே அதிகம்! குறிப்பிட்ட காலம் மட்டுமே மாறி மாறி வருகின்ற அரசியலுக்காக நமது உறவுகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்வதா?? ஆட்சியும், அதிகாரமும் இன்றிருக்கும் நாளை இன்னொருவனின் கையில். அதற்காக நாம் வாழ்நாள் முழுதும் அடிமைகளாக வாழ்வதா??

நாம் ஒவ்வொருவரும் கட்சி கட்சியாகப் பிரிந்துகொண்டும், கட்சிகளுக்குள்ளேயே பிரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் தூற்றியும், தங்களின் உறவுகளை தாங்களே இழிவுபடுத்திக்கொண்டும், போட்டியென்ற பெயரில் பெறாமைகளை நெஞ்சிலே சுமந்துகொண்டு வஞ்சகப்புகழ்ச்சிகளை நாவிலே வழியவிட்டு வாழ்வதும், தங்களுக்குள்ளே சிறு சிறு குழுக்களை அமைத்துக்கொண்டு ஏனைய சகோதரனுக்கு எதிராக ஏவிவிடுவதும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் மூழ்கிக் கிடப்பதும்தான் இன்றைய அரசியலா???

வெளிநாட்டு அரசியலைச் சிந்தித்துப் பாருங்கள். அங்கே ஒரே மேடையில் எதிர்க்கட்சிகள் தமது பிரச்சாரங்களில் ஈடுபடுவர். (உதாரணத்திற்கு அமேரிக்கா, ரஷ்யா, போன்ற மேற்கத்தேய நாடுகள்) அவரவர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைக் வெளியிடுவர், எவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் விரும்புகின்றார்களோ அவர் வெற்றிபெறுவார் சிறந்த ஆட்சியும் அமையும்.

ஆனால் எமது ஊரிலே அரசியல் பிரச்சாரங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வன்முறைகளும், ஒருவரை இன்னொருவர் ஏசித் தீர்ப்பதும், மற்றவருக்கெதிரான வஞ்சகச் சூழ்ச்சிகளை அமைத்தலும், வெற்றிபெற்றவர், ஏனைய தோல்வியுற்றவர்களின் வீடுகளை-சொத்துக்களை சேதப்படுத்துவதும், நண்பர்கள் சகோதரர்களை பழிவாங்குவதும் இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள குண்டர்களை உருவாக்கி ஏனையோர் சட்டத்திலிருந்து நழுவி விடுகின்றனர். ஆனால்அப்பாவி குண்டர்கள் சட்டத்திரைக்குள் அப்படியே அடைபட்டு அவர்களுடைய வாழ்வை முடக்கிக்கொள்கின்றனர்.

சிந்திக்கும் ஆற்றலும், நல்லொழுக்கமும், சிறந்த அறிவுமுடைய மக்களாகிய நாம் அரசியலில் சிந்திக்கவேண்டும்! தம்மை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி குளிர்காயும் சுயநலவாதிகளின் வஞ்சத்தன்மைக்கு ஒருபோதும் ஆளாகி, அடிபணிந்து தம்மைத்தாமே அழித்துக்கொள்ளக்கூடாது. சுடலைஞானம்போல் அவ்வப்போது வருகின்ற தேர்தல் வாக்குறுதிகளால் அடிமையாகிவிடக்கூடாது. இவ்வாறு சிறந்ததை மக்கள் சிந்திப்பதனூடாகவே எமது ஊரில் சேவை செய்யும் உண்மையான அரசியல்வாதிகளை நாமே உருவாக்கமுடியும்! சேவைகளும் அதிகரிக்கும், சமூகமும் செழிக்கும். 
நாம், வன்முறையற்ற அரசியல் உரிமையினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். நடுநிலையாக சிந்திக்கவேண்டும். எமது ஊரைப்பொருத்தளவில், உண்மையான அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டு கொள்ளவேண்டும்! யார் மக்களுக்காக பாடுபடுபவர் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். மக்களின் துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவரை ஒருபோதும் நாம் மறந்துவிடல் கூடாது. ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக வாக்குகளை இடும் உரிமையுண்டு அதனை அவரவர் நல்ல சமூக சிந்தனையுடன் பயன்படுத்தவேண்டும். நமது எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கு நாமே வித்திடவேண்டும். நாம் எமது வாக்குரிமைமூலம் இன்று நாட்டுகின்ற நல்ல அரசியல் விதைகள்தான் நாளை எமது தலைமுறையினைக் காத்து நிற்கும் விருட்ஷமாக வளர்ந்து நிழல் கொடுக்கும் என்பதைப் புறிந்துகொள்ளவேண்டும்.

இடையிடையே தமது அரசியல் இலாபத்திற்காக போலியாக தம்மை புகழ்ந்து உறவுகொண்டாடி  அவ்வப்போது வந்துபோகின்ற அரசியல்வாதிகளை நாம் அறிந்துவைத்திருக்கவேண்டும். மக்களாகிய நாம் விழிப்படைந்தால் மட்டுமே சிறந்த அரசியல்வாதிகளை எமதூரில் உருவாக்கமுடியும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் கருத்தில்கொண்டு செயலாற்றவேண்டும்.

எனவே, பொறாமைகள், வன்முறைகள் அற்ற வகையில் தமது உரிமைகளைக்கொண்டு பொருத்தமானவரை தெரிவுசெய்வது எமது சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் நாம் செய்யவேண்டிய கடமை என்பதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

-நன்றி-




Sunday, 17 January 2016

கௌரவ ரணில் விக்கிரமசிங்க - இலங்கையின் பிரதமர்

கௌரவ ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய சிறிய விளக்கம். இவர், இலங்கை அரசியல்வாதியும், பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 சனவரி 9 முதல்பிரதமராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அரசியல் கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.
விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார். 2015 ஆகஸ்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிவெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் ரணில் முக்கிய பங்காற்றினார்.

மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக்!


இலங்கைப் பிரதமர்களின் பட்டியல்

1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 14 பேர் பிரதமர்களாகப் பதவியேற்றுள்ளனர். 1978 வரை பிரதமரே அரசுத்தலைவராகவும் இருந்தார். 1978 இல், அபோதைய பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சிமுறையை அறிவித்தார். இதன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டன. சனாதிபதி நாட்டுத் தலைவராகவும், அரசுத் தலைவராகவும் ஆனார். பிரதமர் பதவி சம்பிரதாயபூர்வமான பதவியாக ஆனது.
2015 ஏப்ரல் 28 இல், நாடாளுமன்றம் 19வது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சனாதிபதியின் சில அதிகாரங்கள் பிரதமருக்குக் கொடுக்கப்பட்டன.
1947 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த 14 பிரதமர்களில் ரணில் விக்கிரமசிங்க நான்கு தடவைகளும், டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் மூன்று தடவைகளும், இரத்தினசிறி விக்கிரமநாயக்க இரு தடவைகளும் பிரதமர்களாக இருந்துள்ளனர். ஐந்து பிரதமர்கள் சனாதிபதிகளாகப் பதவியேற்றனர். தற்போதைய பிரதமர்ரணில் விக்கிரமசிங்க 2015 சனவரி 9 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார்.

பிரதமர்களின் பட்டியல்

1947 முதல் இலங்கையின் பிரதமர்களாகப் பதவியில் இருந்தோரின் பட்டியல்:
கட்சிகள்
      ஐக்கிய தேசியக் கட்சி                 இலங்கை சுதந்திரக் கட்சி
இல.படிமம்பெயர்
தொகுதி
பதவிக்காலம்அரசியல் கட்சி (கூட்டணி)
1Official Photographic Portrait of Don Stephen Senanayaka (1884-1952).jpgடொன் ஸ்டீபன் சேனாநாயக்க
(1884–1952)
மீரிகம
24 செப்டம்பர்
1947
22 மார்ச்
1952
ஐக்கிய தேசியக் கட்சி
1947
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர். இவரது காலத்தில் இலங்கை பெரிய பிரித்தானியாவிடம்இருந்து விடுதலை பெற்றது.
2Dudley Shelton Senanayaka (1911-1973).jpgடட்லி சேனாநாயக்க
டெடிகமை
26 மார்ச்
1952
12 அக்டோபர்
1953
ஐக்கிய தேசியக் கட்சி
1952
டி. எஸ். சேனநாயக்கா இறந்ததை அடுத்து மகன் டட்லி சேனநாயக்கா பதவியேற்றார். இவரது கட்சி 1952 சூன் தேர்தலில் வெற்றி பெற்றது. 1953 இல் தனது பிரதமர் பதவியைத் துறந்தார்.
3No image.pngசேர் ஜோன் கொத்தலாவலை
தொடங்கஸ்லந்தை
12 அக்டோபர்
1953
12 ஏப்ரல்
1956
ஐக்கிய தேசியக் கட்சி
 —
கொத்தலாவலையின் பதவிக்காலத்தில் இலங்கை ஐநாவில் இணைந்தது.
4Official Photographic Portrait of S.W.R.D.Bandaranayaka (1899-1959).jpgஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
அத்தனகலை
12 ஏப்ரல்
1956
26 செப்டம்பர்
1959
இலங்கை சுதந்திரக் கட்சி
1956
பண்டாரநாயக்கா நாட்டின் அதிகாரபூர்வ மொழியை ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கு மாற்றினார். இவரது பதவிக்காலம் முடியும் முன்னரே இவர் படுகொலை செய்யப்பட்டார்.
5Wijeyananda Dahanayake portrait.jpgவிஜயானந்த தகநாயக்கா
காலி
26 செப்டம்பர்
1959
20 மார்ச்
1960
இலங்கை சுதந்திரக் கட்சி
 —
பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டடதை அடுத்து தகநாயக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவுகளை அடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
6(2)Dudley Shelton Senanayaka (1911-1973).jpgடட்லி சேனாநாயக்க
டெடிகமை
21 மார்ச்
1960
21 சூலை
1960
ஐக்கிய தேசியக் கட்சி
மார்ச் 1960
ஒரு மாதத்தில் சேனநாயக்கா அரசு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
7Sirimavo Ratwatte Dias Bandaranayaka (1916-2000) (Hon.Sirimavo Bandaranaike with Hon.Lalith Athulathmudali Crop).jpgசிறிமாவோ பண்டாரநாயக்கா
(1916–2000)
21 சூலை
1960
25 மார்ச்
1965
இலங்கை சுதந்திரக் கட்சி
சூலை 1960
சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் பிரதமராக நியமிக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. 1960 ஆகத்து 2 இல் செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
8(3)Dudley Shelton Senanayaka (1911-1973).jpgடட்லி சேனாநாயக்க
டெடிகமை
25 மார்ச்
1965
29 மே
1970
ஐக்கிய தேசியக் கட்சி
1965
ஐதேக அறுதிப் பெரும்பான்மை பெறாததால் மேலும் ஆறு கட்சிகளுடன் இணைந்து அரசை அமைத்தது. சேனநாயக்கா மூன்றாவது தடவையாக பிரதமரானார்.
9(2)Sirimavo Ratwatte Dias Bandaranayaka (1916-2000) (Hon.Sirimavo Bandaranaike with Hon.Lalith Athulathmudali Crop).jpgசிறிமாவோ பண்டாரநாயக்கா
அத்தனகலை
29 மே
1970
22 மே
1972
இலங்கை சுதந்திரக் கட்சி
22 மே
1972
23 சூலை
1977
1970
சிறிமாவோ பண்டாரநாயக்கா டொமினியன் இலங்கையை குடியரசாக அறிவித்தார். சிலோன் என்றிருந்த நாட்டின் பெயரை சிறீலங்கா என மாற்றினார். பல தனியார் நிறுவனங்களை அரசுடைமை ஆக்கினார். இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.
10Junius Richard Jayawardana (1906-1996).jpgஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
(1906–1996)
கொழும்பு மேற்கு
23 July
1977
4 February
1978
ஐக்கிய தேசியக் கட்சி
1977
1978 இல் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை அறிவித்து சனாதிபதியானார்.
11No image.pngரணசிங்க பிரேமதாசா
(1924–1993)
கொழும்பு மத்தி
6 பெப்ரவரி
1978
2 சனவரி
1989
ஐக்கிய தேசியக் கட்சி
 —
1978 அரமைப்புத் திருத்தத்தை அடுத்து பெருமளவு குறைக்கப்பட்ட அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது பிரதமர்.
12No image.pngடிங்கிரி பண்டா விஜயதுங்கா
கண்டி
6 மார்ச்
1989
7 மே
1993
ஐக்கிய தேசியக் கட்சி
1989
13Ranil Wickremesinghe.jpgரணில் விக்கிரமசிங்க
கம்பகா
7 மே
1993
19 ஆகத்து
1994
ஐக்கிய தேசியக் கட்சி
 —
சனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை அடுத்து விஜேதுங்க புதிய சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
14Chandrika Kumaratunga.jpgசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
கம்பகா
19 ஆகத்து
1994
12 நவம்பர்
1994
இலங்கை சுதந்திரக் கட்சி
(மக்கள் கூட்டணி)
1994
சிறிது காலத்திற்கு பிரதமராக இருந்து பின்னர் 1994 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சனாதிபதி ஆனார்.[17]
15(3)Sirimavo Ratwatte Dias Bandaranayaka (1916-2000) (Hon.Sirimavo Bandaranaike with Hon.Lalith Athulathmudali Crop).jpgசிறிமாவோ பண்டாரநாயக்கா
தேசியப் பட்டியல்
14 நவம்பர்
1994
9 ஆகத்து
2000
இலங்கை சுதந்திரக் கட்சி
(மக்கள் கூட்டணி)
 —
சந்திரிக்கா சனாதிபதி ஆனதை அடுத்து அவரது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக அறிவிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் இவர் பதவி விலகினார்.
16Ratnasiri Wickremanayake1.jpgஇரத்தினசிறி விக்கிரமநாயக்க
களுத்துறை
10 ஆகத்து
2000
7 டிசம்பர்
2001
இலங்கை சுதந்திரக் கட்சி
(மக்கள் கூட்டணி)
2000
சிறிமாவோ பதவி விலகியதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக நியமிக்கப்பட்டார்.[2]
17(2)Ranil Wickremesinghe.jpgரணில் விக்கிரமசிங்க
கொழும்பு
9 டிசம்பர்
2001
6 ஏப்ரல்
2004
ஐக்கிய தேசியக் கட்சி
2001
சனாதிபதி குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் கலைத்ததை அடுத்து ரணிலின் பதவிக்காலம் முடிவடைந்தது. 2004 இல் புதிய பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
18WEF on the Middle East Arab and foreign Ministers Crop.jpgமகிந்த ராசபக்ச
அம்பாந்தோட்டை
6 ஏப்ரல்
2004
19 நவம்பர்
2005
இலங்கை சுதந்திரக் கட்சி
(ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
2004
2005 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்ச வெற்றி பெற்று சனாதிபதி அனார்.
19(2)Ratnasiri Wickremanayake1.jpgஇரத்தினசிறி விக்கிரமநாயக்க
தேசியப் பட்டியல்
19 நவம்பர்
2005
21 ஏப்ரல்
2010
இலங்கை சுதந்திரக் கட்சி
(ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
 —
ராசபக்ச சனாதிபதி ஆனதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
20No image.pngதிசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன
தேசியப் பட்டியல்
21 ஏப்ரல்
2010
9 சனவரி
2015
இலங்கை சுதந்திரக் கட்சி
(ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
2010
21(3)Ranil Wickremesinghe.jpgரணில் விக்கிரமசிங்க
கொழும்பு
9 சனவரி
2015
21 ஆகத்து
2015
ஐக்கிய தேசியக் கட்சி
2015
2015 சனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து நல்லாட்சிக்கான 100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லாத ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
22(4)Ranil Wickremesinghe.jpgரணில் விக்கிரமசிங்க
கொழும்பு
21 ஆகத்து
2015
இன்றுஐக்கிய தேசியக் கட்சி
2015
2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்க 7 இடங்கள் தேவையாக இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது. ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.