எமது கிராமத்தைப்பொறுத்தளவில் சிலர் தத்தமது சுயநலனுக்காக மக்களைக் காண்பித்து வயிறுவளர்க்கும் நோக்கில் தாமாகவே ஏதோ ஒரு வகையில் சங்கங்களையும், விளையாட்டுக்கழகங்களையும் பதிவுசெய்துவிட்டு அதற்கு தலைவராக அமர்ந்துகொண்டு கிடைக்கின்ற நன்கொடைகளால் சுகபோக வாழ்க்கையில் ஈடுபகின்றனர்.
இவர்களின் சோம்பேரித் தனங்களையும், கள்ளத்தனத்தையும் மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டவும், உண்மையான தகவல்கள் சரியானமுறையில் சமூக அங்கத்தவர்களுக்கு சென்றடையவேண்டுமென்ற நோக்கிலும் இவ்வாறான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டமை எமது மக்களுக்கு கிடைத்த பெரும் வரமாகும்.
எவ்வாறு தகவல்களை அறிவதென்றால்.....
கீழே காணப்படுகின்ற “கிளிக்” எனும் லிங்கை கிளிக் செய்வதனூடாக குறித்த படிவத்தை பெற்று அதனை சரிவர நிறப்பியபின்னர் அப்படிவத்தை “பிரதேச செயலாளருக்கு” பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவேண்டும். அதன்பின்னர் உங்களது படிவம் சென்றடைந்தமைக்கான பதில் 14 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு கிடைக்கவேண்டும். அடுத்து வருகின்ற 14 வேலை நாட்களுக்குள் உங்களது கேள்விளுக்கான தகவல்களை குறித்த பகுதியினர் அனுப்பிவைக்கவேண்டும். எல்லாமாக 28 வேலை நாட்களுக்குள் உங்களின் படிவத்துக்கான முழுத் தகவல்களும் கிடைக்கவேண்டும். இதுவே முறை.
மேலதிக தகவல்.....
இலங்கையைப் பெறுத்தவரை 1996ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் கோரிக்கையானது 2001ஆம் ஆண்டு சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. அதன்பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்துவந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் அது தொடர்பான கவனம் ஏற்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது.
2016ஆம் ஆண்டு மார்ச்/ஜுன் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து சட்டமாக உருவாக்கினார். பின்னர், இச்சட்டமானது முழுமையாக கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்க!
மேலதிக தகவல்
கசடறக் கற்க!
0 comments:
Post a Comment